இன்று திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து திருப்பூர் சென்றார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.. அப்போது திடீரென பெண் ஒருவர் வைரமுத்து மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.. எனினும் அந்த காலணி வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை தாண்டி சென்று விழுந்தது..
காலனி வீசிய பெண்மணி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் அப்பெண்ணை அப்புறப்படுத்தி வைரமுத்துவை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.. வைரமுத்து மீது காலணி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
Read More : “அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்..” பியூஷ் கோயல் – இபிஎஸ் உறுதி..!



