காதலனுக்காக கணவனை கொன்றுவிட்டு பிளாக்மெயிலில் சிக்கிய பெண்..!! கொலைக்கு உதவிய நண்பனுடன் 4 ஆண்டுகள் உடலுறவு..!! வெளிவந்த ஷாக்கிங் உண்மை..!!

Sex 2025

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு மர்ம மரணம், தற்போது அவிழ்க்கப்பட்டுள்ள திடுக்கிடும் உண்மைகளால் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ரேகா எனும் பெண், பெற்றோரின் கட்டாயத்தினால் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டாலும், தனது பழைய காதலன் விக்ரம் மீதான காதலை கைவிடவில்லை. ஒருமுறை காதலனுடன் ஊரை விட்டு ஓடிய ரேகாவை, அவரது பெற்றோர் சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


ஆனால், விக்ரமுடன் இணைந்தே தீர வேண்டும் என்ற வெறியில் இருந்த ரேகா, தனது கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஒரு நள்ளிரவில் அர்ஜுனுக்கு அதிகப்படியான மதுவைக் கொடுத்து மயக்கமடைய செய்த ரேகா, விக்ரம் மற்றும் அவரது நண்பன் ராகேஷ் ஆகியோரை தனது வீட்டிற்குள் வரவழைத்தாள். மூவரும் சேர்ந்து அர்ஜுனை தலையணையால் அழுத்திப் படுகொலை செய்தனர். மறுநாள் விடிந்ததும், அர்ஜுன் அதிக மதுபோதையால் உயிரிழந்ததாக நாடகமாடி, உறவினர்களை நம்ப வைத்து எவ்விதச் சிக்கலுமின்றி இறுதிச் சடங்குகளை முடித்தனர்.

கொலை நடந்த சில மாதங்களிலேயே விக்ரமை மணம் முடித்த ரேகாவின் வாழ்வில், பிளாக்மெயில் எனும் பெயரில் புதிய இடி இறங்கியது. கொலையில் உடந்தையாக இருந்த விக்ரமின் நண்பன் ராகேஷ், ரேகாவின் அழகின் மீது கொண்ட வக்கிர ஆசையினால் அவளை மிரட்ட தொடங்கினான். “உன்னுடைய ரகசியத்தை போலீசில் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால், என்னுடன் தனிமையில் பழக வேண்டும்” என்று நிபந்தனை விதித்தான்.

வேறு வழியின்றி, தனது கள்ளக்காதல் கணவன் விக்ரமுக்குத் தெரியாமல், கடந்த 4 ஆண்டுகளாக ராகேஷின் இச்சைக்கு ரேகா அடிபணிந்துள்ளார். பணத்தை விடவும் ரேகாவை உடல் ரீதியாக சுரண்டுவதையே ராகேஷ் தனது வாடிக்கையாக கொண்டிருந்தான். ஆனால், ராகேஷுக்கும் ரேகாவுக்கும் இருந்த ரகசியத் தொடர்பு விக்ரமுக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், ராகேஷை அடித்துத் துவைக்க, அந்த மோதல் காவல் நிலையம் வரை சென்றது.

விக்ரமால் தாக்கப்பட்ட ஆத்திரத்தில், “நானும் விக்ரமும் சேர்ந்துதான் ரேகாவின் முதல் கணவரை கொன்றோம்” என்ற உண்மையை ராகேஷ் போலீசாரிடம் போட்டுடைத்தான். 4 ஆண்டுகளாக புதைக்கப்பட்டிருந்த அந்தப் பயங்கரமான ரகசியம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, தற்போது ரேகா, விக்ரம் மற்றும் ராகேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Read More : கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்..!! முன்கூட்டியே பிளான் போட்ட திமுக..!! தேமுதிக இணைந்ததன் சுவாரசிய பின்னணி..!!

CHELLA

Next Post

Dream | உங்கள் கனவில் சடலம், சுடுகாடு வருகிறதா..? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

Thu Feb 19 , 2026
இந்து தர்மத்தில் ஜோதிடத்தை போலவே கனவு சாஸ்திரமும் மனித வாழ்வின் எதிர்கால சமிக்ஞைகளைக் கணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக, கனவில் இடுகாடு அல்லது கல்லறையைப் போன்ற காட்சிகள் தோன்றினால் எவரும் அச்சமடைவது இயல்பு. மரணம் மற்றும் சடலங்கள் சார்ந்த கனவுகள் மனதிற்குச் சங்கடத்தைத் தந்தாலும், கனவு அறிவியலின் (Swapna Shastra) ஆழமான விளக்கங்கள் நமது பொதுவான அச்சத்திற்கு நேர்மாறான நற்பலன்களையே முன்வைக்கின்றன. இடுகாடு தொடர்பான கனவுகள் உண்மையில் ஒருவரின் […]
Dream 2026

You May Like