“போதை மருந்து கொடுத்து.. பல வருஷமா பாலியல் வன்கொடுமை” விஜய் சேதுபதி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்த பெண்..!

vijaysethupathi1

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நடிகராக பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில் பேட்ட, மாஸ்டர், விக்ரம் மற்றும் இந்தியில் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லன் கேரக்டரிலும் அசத்தியுள்ளார். இவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவன் தலைவி என்ற படம் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.


இந்த நிலையில் ரம்யா மோகன் என்ற சமூக வலைதள பயனர் ஒருவர், விஜய் சேதுபதி தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுவரையில் எந்த சர்ச்சையிலும் சிக்காத விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பதிவில், கோலிவுட்டின் போதைப்பொருள் மற்றும் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் ஒரு ஜோக் அல்ல. எனக்குத் தெரிந்த ஒரு பெண், இப்போது மீடியாவில் பிரபலமான முகம், அவள் ஒருபோதும் விரும்பாத ஒரு உலகத்திற்குள் இழுக்கப்பட்டாள். அவள் இப்போது ஒரு மறுவாழ்வு மையத்தில் இருக்கிறாள். போதைப்பொருள், தில்லுமுல்லு, மற்றும் கொடுக்கல் வாங்கல் சுரண்டல் ஆகியவை திரைத்துறை நியமங்களாக மாறுவேடமிட்டுள்ளன.

விஜய் சேதுபதி கேரவன் செல்ல’ ரூ. 2 லட்சம், பாலியல் தேவைக்காக ரூ. 50 ஆயிரம் கொடுத்துள்ளார், சமூக வலைதளங்களில் புனிதர் போல் நடிக்கிறார். அவர் அவளை பல வருடங்களாகப் பயன்படுத்தியுள்ளார். இது ஒன்று மட்டும் அல்ல. இதுபோன்று பல உள்ளன. ஆனால் ஊடகங்கள் இந்த மனிதர்களை புனிதர்கள் போல் போற்றுகின்றன. போதைப்பொருள்-பாலியல் தொடர்பு நிஜம். இது ஒரு ஜோக் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், “சில உணர்வற்ற முட்டாள்கள் உண்மையை ஒப்புக்கொள்வதை விட, ஆதாரத்தைக் கேள்வி கேட்பதிலும், பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுவதிலும் கவனம் செலுத்துவது பைத்தியக்காரத்தனம். இந்த உண்மை, அவள் டைரி மற்றும் போன் உரையாடல்களைப் பார்த்தபோது குடும்பத்தை ஒரு புயல் போல தாக்கியது. இது வெறும் கதை மட்டுமல்ல. இது அவளுடைய வாழ்க்கை, அவளுடைய வலி என்று பதிவிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: சிவாஜியால் கூட இந்த அளவு நடிக்க முடியாது.. மருத்துவமனையில் கூட நாடகம்..!! – ஸ்டாலினை தாக்கி பேசிய EPS

English Summary

Woman who made sexual allegations against Vijay Sethupathi

Next Post

நீண்டகால மூலதன லாப வரி விகிதங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

Wed Jul 30 , 2025
வருமான வரி மசோதா, 2025 தற்போதுள்ள வரி விகிதங்களில், குறிப்பாக நீண்டகால மூலதன லாப வரி (Long-Term Capital Gains – LTCG) தொடர்பான வரி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் முன்மொழியப்படவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. நிதி ஆண்டிற்கான புதிய வரி விதிகள் படி, 2025-26 ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், நீண்டகால லாபங்களுக்கு (LTCG) சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உங்கள் நீண்டகால முதலீட்டிற்கு […]
income

You May Like