சென்னை நசரத்பேட்டையில் 25 வயது இளம்பெண் ஒருவர், திருமணமான நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட இளைஞர் ஒருவர், அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை அந்தப் பெண் திறந்ததும் தான் மறைத்து எடுத்து வந்த திருப்புளியை காட்டி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
மேலும், வீட்டிற்குள் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டுப்போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அதற்கும் மேலாக அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோவும் எடுத்து வைத்துள்ளார்.
தொடர்ந்து அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டி 11 பவுன் நகைகளை வாங்கியுள்ளார். மேலும், இதுகுறித்து புகாரளித்தால், உன்னுடைய அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜர்குமார் என்பது தெரியவந்தது. இவருக்கு வயது 25.
இவர், கோவையில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அஜய்குமாரை கைது செய்தனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது தவறி விழுந்ததில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தொழில்களை செய்து வந்த அஜய்குமாருக்கு ரூ.9 லட்சம் வரை கடனாகியுள்ளது. அந்த கடனை அடைப்பதற்காக இதுபோன்ற குற்ற செயல்களில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More : கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? உங்கள் மூளை வழக்கத்தை விட 6 மாதம் முதிர்ச்சி அடைந்துவிட்டது..!!