வின்ஃப்ராக்ஸ் சால்யூஷன்ஸ் (Winfrox Solutions) எனும் தனியார் ஐடி நிறுவனம், தற்போது வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய QA Engineer – Manual பதவிக்காக ஆட்கள் தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
Winfrox Solutions என்பது ஐடி சர்வீசஸ் மற்றும் கன்சல்டிங் சேவைகளில் செயல்படும் நிறுவனம். மேனுவல் டெஸ்ட்டிங் துறையில் ஆர்வமுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பணிக்கு 0 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்களும், அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இருந்தாலும், கீழ்க்காணும் திறன்கள் தேவைப்படுகிறது.
தேவையான தகுதிகள்:
* Test Plans, Test Cases உருவாக்கும் திறன்
* SDLC, STLC, Defect Life Cycle குறித்த அறிவு
* Smoke, Sanity, Integration, Regression Testing வகைகள் குறித்து விளக்கம்
* Agile Frameworks-ல் பணி செய்த அனுபவம் இருந்தால் கூடுதல் நன்மை
அலுவலகம் செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்து பணியாற்றலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் கூறப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.