தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்.. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. கை நிறைய சம்பளம்..!!

job 2

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பிரபலமான மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் கோயிலில் பணிபுரிய விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், வரும் டிசம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


பணியிட விவரம்:

உதவி பொறியாளர் – 1
இளநிலை உதவியாளர் – 2
சீட்டு விற்பனையாளர் – 3
தமிழ் புலவர் – 1
உதவி மின்பணியாளர் – 2
பாரா – 6
குருக்கள் அர்ச்சகர் உபகோயில் – 1
காவலர் – 1
உதவி பரிச்சாரகர் – 2

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதைப் பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதே போன்று, 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

உதவி பொறியாளர்: சிவில் பொறியியலில் இளங்கலை பட்டம் (BE/B.Tech – Civil) பெற்றிருக்க வேண்டும். அல்லது பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பிரிவு A மற்றும் B தேர்ச்சி பெற்று, சிவில் பொறியியலை ஒரு பாடமாகக் கற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர்: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சீட்டு விற்பனையாளர்: 10-ம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம்.
மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் புலவர்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Lit / BA (Tamil) / MA (Tamil) / M.Lit பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் திருமுறைகள் ஒப்புவித்தலில் (பாடல் உச்சரிப்பு) திறன் பெற்றிருக்க வேண்டும்.

உதவி மின்பணியாளர்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் மின் / மின்கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பாரா: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

குருக்கள் / அர்ச்சகர்: தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும். ஆகமப் பள்ளி அல்லது வேதபாடசாலை மூலம் தொடர்புடைய துறையில் ஒரு ஆண்டு பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் அவசியம்.

காவலர்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

உதவி பரிச்சாரகர்: தமிழில் வாசிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். கோயில் வழக்கங்களுக்கு ஏற்ப நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்

  • உதவி பொறியாளர் பதவிக்கு நிலை 35 கீழ் ரூ.36,700 – 1,16,200 வரை வழங்கப்படும்.
  • இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர் மற்றும் தமிழ் புலவர் பதவிகளுக்கு நிலை 22 கீழ் ரூ.18,500 முதல் 58,600
  • உதவி மின்பணியாளர் பதவிக்கு நிலை 18 கீழ் ரூ.16,600 – 52,400
  • பாரா பதவிக்கு நிலை 17 கீழ் ரூ.15,900 – 50,400
  • குருக்கள் அர்ச்சகர் உபகோயில் மற்றும் காவலர் பதவிகளுக்கு நிலை 12 கீழ் ரூ.11,600 – 36,800
  • உதவி பரிச்சாரகர் பதவிக்கு நிலை 10 கீழ் ரூ.10,000 – 31,500

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ என்ற கோயிலின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய தகுதிச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.

Read more: Flash : காலையிலேயே ஷாக் நியூஸ்..! ஒரே நாளில் ரூ.8000 உயர்ந்த வெள்ளி.! தங்கம் விலையும் அதிரடி உயர்வு..!

English Summary

Work in the Hindu Religious Endowments Department.. A lot of salary..!!

Next Post

காலையில் டீ உடன் பிஸ்கட் சாப்பிடுறீங்களா..? அது எவ்வளவு ஆபத்துன்னு தெரிஞ்சுக்கோங்க..!

Wed Dec 10 , 2025
Let's see how dangerous it is to eat biscuits with tea every day.
chai tea biscuit

You May Like