திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த அல்லியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 45), ஒரு தொழிலாளி. கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று தனது வீட்டிலிருந்தபோது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டன. இருப்பினும், திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பிய லூக்காஸ், மருத்துவமனைக்கு எதிரே உள்ள புறவழிச் சாலைக்குச் சென்றுள்ளார். அங்கு, சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது விழுந்து அவர் மீண்டும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால், பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு உடனடியாக வண்டியை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதன் பின்னர், அங்கிருந்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்குச் சென்றார். அந்த நேரத்தில், போளூரில் இருந்து கண்ணாடி லோடு ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி நோக்கிச் சென்ற லாரியின் மீது விழுந்து மீண்டும் ஒருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அப்போது இதைக் கண்ட லாரி ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்.
இதன் விளைவாக, முன்னே சென்ற லாரியின் மீது, மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு லாரிகளிலும் கணிசமான சேதம் ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கிடையே, லூக்காஸ் யாரும் எதிர்பாராத சமயத்தில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குதித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : இப்படியே போச்சுனா நிலைமை ரொம்ப மோசமாகிடும்..!! இத்தனை குடும்பங்கள் அடிமையா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!



