உலக தடகள சாம்பியன்ஷிப் : ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஏமாற்றம்.. சச்சின் யாதவ் அசத்தல்!

sachin yadav neeraj chopra 184245593 16x9 0 1

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் டோக்கியோவில் நடந்து வருகின்றன.. ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கான வீரர்களை தகுதி செய்யும் போட்டி நேற்று நடந்தது.. இதில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்..


இந்த நிலையில் உலக தடகள் சாம்பியன்ஷிப் தொடர், ஈட்டி எறிதல் போட்டியில் ட்ரின்பகோனியா நாட்டை சேர்ந்த கெஷோர்ன் வால்காட் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.. இதனால் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்..

ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.. இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 84.03 மீ ஈட்டி எறிந்து 8-வது இடம் பிடித்தார்.. தாம்சன் 86.67 மீ ஈட்டி எறிந்து வெண்கலம் வென்ற நிலையில், சச்சின் யாதவ் 86.27 மீ எறிந்து 4-வது இடம் பிடித்தார்.. தனது 5 முயற்சிகளிலும் ஒருமுறை கூட அவர் 85 மீ தாண்டி ஈட்டி எறியவில்லை.. கடந்த முறை தங்கம் வென்றிருந்த நீரஜ் இந்த முறை பதக்கமின்றி திரும்புவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்..

Read More : AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 10 நாடுகள் இவை தான்! இந்தியாவின் எந்த இடத்தில் உள்ளது? 

RUPA

Next Post

இந்தியாவுக்கு தங்க ஜாக்பாட்! ஆண்டுக்கு 750 கிலோ தங்க உற்பத்தியை தொடங்க உள்ள பிரபல நிறுவனம்!

Thu Sep 18 , 2025
ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்கச் சுரங்கம், விரைவில் முழு அளவிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்று டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எண்ணெய்க்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய தங்க இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்து இருந்து வருவதால், இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள […]
Gold deposits in India

You May Like