குறுகிய சில காலத்திற்குப் பிறகு மீண்டும் குற்றம் இழைக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து செனட் நிறைவேற்றியுள்ளது.
மேலும் இந்த மசோதா 145 செனட்டர்களின் ஆதரவை பெற்றுள்ளது. 2013ஆம் வருடத்திற்கும் மற்றும் 2020 ஆம் வருடத்திற்கும் இடையில் தாய்லாந்து நாட்டின் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16 ஆயிரம் பாலியல் குற்றவாளிகளில் மீண்டும் 4848 பேர் பாலியல் குற்றங்களை செய்துள்ளனர்.
என்று வழக்குப்பதியப்பட்டுள்ளது.
எனவே குறுகிய சிறைக் காலத்திற்குப் பிறகு மீண்டும் பாலியல் குற்றங்களை செய்பவர்களுக்கு, இந்த மசோதாவின் கீழ் ரசாயன ஊசிகளை செலுத்தலாம். மேலும் தற்பொழுது போலந்து, தென்கொரியா, ரஷ்யா, எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் மட்டுமே கெமிக்கல் காஸ்ட்ரேஷன் பயன்பாடுத்துவது சட்டபூர்வமாக உள்ளது.