க்ளிவ்டெனில் உள்ள கடற்கரை சாலையில் வரையப்பட்டிருக்கும் குறியீடு, மக்களிடையே குழப்பத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் க்ளிவ்டெனில் உள்ள கடற்கரை சாலையின் ஒரு பகுதியில் மட்டும் அலைகளை போன்று வெள்ளை கோடு வரையப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த சாலையில் பார்க்கிங் வசதிக்கான இடம் போக எஞ்சிய பகுதி இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்டு அதற்கான குறியீடும் வரையப்பட்டுள்ளது. அந்த குறியீட்டை முழுமையாக வரையாமல் இருந்ததால் அது பார்ப்பதற்கு போதையில் தள்ளாடிக் கொண்டே வண்டி ஓட்டுவது போல காணப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து குழப்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
![குடிபோதையில் தள்ளாடிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு பிரத்யேக சாலை..? சுவாரஸ்ய சம்பவத்தின் பின்னணி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-12-at-9.21.11-AM.jpeg)
ஏனென்றால், சாலையில் வரையப்பட்டிருக்கும் குறியீட்டை கொண்டே வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக இருக்கும். ஆனால், அந்த கடற்கரை சாலையில் வரையப்பட்டிருக்கும் அந்த குறியீடு வாகன ஓட்டிகளை குழப்பமடையவே செய்யும் என்றும், பார்க்கிங் வசதியை மாற்றியமைத்தால் சிரமமாகவே இருக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதுபோக ஒரு கையெழுத்து இயக்கத்தையும் உருவாக்கி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு அதனை கவுன்சிலிலும் ஒப்படைத்திருக்கின்றனர்.
![குடிபோதையில் தள்ளாடிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு பிரத்யேக சாலை..? சுவாரஸ்ய சம்பவத்தின் பின்னணி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/photo_2023-01-12_09-23-01.jpg)
முன்னதாக மெட்ரோ செய்தியின் படி, அந்த சாலை குறியீடு வேண்டுமென்றே அலைகளை போன்று வரையப்பட்டதா அல்லது பாதியில் நிறுத்தப்பட்டதற்கான குறியீடா என்று சரியாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.