தனது மகன் மற்றும் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க தாயே , வாடகைத்தாயாக மாறி மகனுக்கு குழந்தையை பெற்றுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் உட்டா பகுதியில் வசித்து வந்தவர்கள் நான்சி ஹாக் குடும்பத்தினர். இவரதுமகன் ஜெஃப் ஹாக். சில ஆண்டுகளுக்கு முன்பு கேம்ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டது. 6 நாட்களுக்குப் பின்னர் நேர்மறை முடிவு கிடைத்தது. பின்னர் 3 மாதங்கள் ஆனது. அவர் அந்த குழந்தைகள் இரண்டும் பெண் என கணித்தார். அதே போல பெண்ணாக இருந்தது. மேலும் அவர் 4 முதல் 5 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள நினைத்தனர். எனவே 2012ம் ஆண்டு இரண்டு பெண்குழந்தைகளை கேம்ப்ரியா பெற்றெடுத்தார். தற்போது 4 வயதாகின்றது.
பின்னர் அடுத்த முறையில் 7 கருக்கள் வைக்கப்பட்டது அவருக்கு இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தனர். லூகா, டீசல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைகள் பிறந்து தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க நினைத்தபோது ரத்தக் கசிவு ஏற்பட்டது. அவருக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சனையால் கேம்ப்ரியாவுக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டது.
இருப்பினும் தங்கள் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என நினைத்த தம்பதியினர் வாடகைத்தாயை தேடினர். பின்னர் அவரது தாயே வாடகை தாயாக இருக்க ஒப்புக்கொண்டார். இதை அழகான விஷயமாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கு நான்சியின் கணவர் ஜேசனும் சம்மதித்தார். இதையடுத்து 5-வது குழந்தையை அவரது தாய் பெற்றெடுத்தார்.
https://www.instagram.com/reel/CkihR3cMu-0/?utm_source=ig_web_copy_link