பிரிட்டனின் பொருளாதாரத்தை சரி செய்வது பற்றி திட்டங்கள் குறித்த அறிவிப்பை புதிய பிரதமர் ரிஷி சுனக் நவம்பர் 17ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பொருளாதார கொள்கைகள் விவகாரத்தில் ஒரே ஆண்டில் 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். லிஸ்ட்ரஸ் தலைமையிலான பட்ஜெட்டுக்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அடுத்த பிரதமராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த சுனக் நியமிக்கப்பட்டார்.
இந்த மாத இறுதியில் பொருளாதார விவகாரத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 17ம் தேதி தாமதமாக நாட்டின் பொது நிதியை சரி செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிச் சந்தைகளில் பிரிட்டிஷ் கடன் வாங்கும் செலவுகள் உயர்ந்தது. ட்ரஸ் செப்டம்பர் வரிக் குறைப்பு திட்டத்தால் பீதியை ஏற்படுத்தியது.
நிதித்துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய திட்டங்களை அமல்படுத்தவதில் சற்று தாமதம் ஏற்படும். சமீபத்திய வணிகம் பற்றி கணித்த பின்னர் அறிவிக்கப்படும். நானும் புதிய பிரதமரும் சேர்ந்து 17ம் தேதி தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க முடிவெடுத்துள்ளோம் அது விவேகமானது என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் 40 பில்லியன் பவுண்டுகள் . பட்ஜெட் பற்றாக்குறை சாத்தியமான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த பட்ஜெட் நிதி கண்காணிப்பு அமைப்பால் தணிக்கை செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சரியான முடிவுகளை ஆலோசனை பெற்று அதை உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் அந்த முடிவுகளை வெளியிட வேண்டும் என்பது மிக முக்கியம் என தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் நிதி சந்தை கடந்த மாதம் ட்ரஸ் பட்ஜெட் தாக்கல் செய்தபோது ஒரு ஆட்டம் கண்டது. வரி குறைப்பு , பாண்ட் மார்க்கெட் வழிமுறைகள் போன்றவை யு டர்ன் போட வைத்தது.
சந்தை வினை: சுனக் முன்னதாக நிதி அமைச்சராக பொறுப்பில் இருந்துள்ளார். கோவிட் 19 நோய்த்தொற்று காலத்தில் மிகப்பெரி நிதி செலவினங்கள் மற்றும் கடன் வாங்குதல் பொருளாதார மேம்பாடு போன்றவற்றை கையாண்டுள்ளார். ஜூலை மாதம் நடந்த போரிஸ் ஜான்சன் தலைமையிலான பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதை அடுத்து அனைவரும் ராஜினாமா செய்தனர்.
கன்சர்வேட்டிவ் கட்சி அவரை பணி அமர்த்தியுள்ளது. ட்ரஸ்சின் குறுகிய கால பணிக்கு பின்னர் இவர் வரவேற்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பொது நிதி கையாளுதலை இவர்கள் சமாளிப்பார்கள் என பெருமளவு நம்பப்படுகின்றது.