பிரிட்டிஷில் மீண்டும் பிரதமர் தேர்தல் நடத்தஉள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அத்தேர்தலில் மீண்டும் ரிஷி சுனக் போட்டியிருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடமான பிரிட்டனின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்..
ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரா பிரதமராக முடியும் இதனால் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை முன்னாள் வெளியுறவு அமைச்சரான லிஸ்ட்ரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனுால் , அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் , நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால் 45 நாட்கள் பதவியில் இருந்த நிலையில் , லிஸ் டிரஸ் பொருளாதா கொள்கை வகுத்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த வாரத்திற்குள் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் , 1.70 லட்சம் பிரதிநிதிகள் ஓட்டளிக்க உள்ளனர். இதற்கு முன் நாளைக்குள் தலைவர் பதவிக்கு யார் யார் போட்டியிருகின்றார் என்பது பற்றி விரைவில் இறுதி செய்யப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரிட்டன் ஒரு சிறந்த நாடு. நாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றோம். அதனால்தான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் உங்களின் அடுத்த பிரதமராகவும் , நிற்கின்றேன். நமது பொருளாதாரத்தை சரி செய்யவும் , நமது கட்சியை ஒன்றிணைக்கவும் நம் நாட்டிற்கு உழைக்க விரும்புகின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.