fbpx

டைட்டானிக் படத்தின் ஹீரோ உயிர் பிழைத்திருக்கலாம்..? 25ஆண்டுகளுக்கு பின் ஜேம்ஸ் கேமரூன் சொன்ன ரகசியம்…!

டைட்டானிக் கப்பலில் இறுதியாக லியானார்டோ டிகாப்ரியோ(ஜாக்) உயிர் பிழக்கை ஒரு வழி இருந்ததாக தனது அறிவியல் ஆய்வு மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் ‘டைட்டானிக்’ என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், 1500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த விபத்து மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்பட்டு வருகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை 1997 ம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஆங்கிலத் திரைப்பட டைட்டானிக் வெளியானது. இப்படத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்தனர்.

உண்மைக் காதலை மையமாக வைத்து, ஆடம்பரப் பயணிகள் கப்பலான ‘டைட்டானிக்’ மூழ்கிய சோகக் கதையை வைத்து இப்படம் வெளிவந்து உலக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தது. ‘டைட்டானிக்’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் திரைப்படத்தில் உள்ள பல சாத்தியக்கூறுகள் குறித்து இன்னும் ஆய்வு செய்துவருகிறார்.

டைட்டானிக் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் வரும் 10ஆம் தேதி மீண்டும் புதுப்பொலிவுடன் டைட்டானிக் படம் வெளியாக உள்ளது, இதற்காக டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் பேசிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், படத்தின் ஹீரோ ஜாக் உயிர் பிழைக்க ஒரு வழி இருந்ததாக கூறுகிறார். மிதக்கும் பொருள் மீது இருவரும் ஏறி இருந்திருக்கலாம் என்றும், தனது லைஃப் ஜாக்கெட்டை ஜாக்கிற்கு ரோஸ் கொடுத்து காப்பாற்றி இருக்கலாம் எனவும் கூறுகிறார்..

இதைப்போல ஜாக் சென்ற ஒரு இடத்தில் அவசரகால படகு வந்ததாகவும், அதில் ஏறி உயிர் பிழைத்திருக்கலாம் எனவும் கூறுகிறார். ரோசின் மனதை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்ற சிந்தனையில் ஜாக் செயல்பட்டதாக கூறும் கேமரூன், நிறைய மாறுபாடுகள் இருப்பதால் கிளைமேக்சில் நடிகர் இறப்பது போன்ற காட்சியை வைத்ததாக கூறுகிறார்.

Kathir

Next Post

Rain: அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும்...!

Sun Feb 5 , 2023
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் […]

You May Like