fbpx

மகனை விவாகரத்து செய்வதால் மருமகள்சுட்டுக் கொலை ….

அமெரிக்காவில் தன் மகனை விவாகரத்து செய்வதால் மருமகளை மாமனால் சுட்டுக் கொன்றார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சிதல் சிங்  அவரது மருமகள் குர்ப்ரீத் கவுர் என்பவரை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்தார்.

கடந்த வாரம் இச்சம்பவம் நடந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவருடைய காரில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குப்ரீத்தின் நண்பர்கள் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே கூறியதாக தெரிவித்தனர். மேலும் குர்ப்ரீத் தனது உறவினர்களிடம் மாமனார் தன்னை தேடி வந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்

இந்த கோணத்தில் விசாரணை நடத்தியதில் குர்ப்ரீத் கடைசியாக உறவினரிடம் செல்போனில் பேசியிருந்தர். தனது அலுவலகத்தில் சிதல் வந்திருப்பதை பார்த்தவுடன் போன்செய்து உறவினரிடம் கூறியுள்ளார். தனக்கு பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு பின்னரே கொலை நடந்துள்ளது. பார்க்கிங் பகுதியில் 2 முறை சுட்டுள்ளார். உடலை மீட்ட காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இரண்டு தோட்டாக்கள் உடலில் இருந்து அகற்றப்பட்டன.

சிதலின் மகனை குர்ப்ரீத் விவாகரத்து செய்யும் முடிவில் இருந்துள்ளார். இதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் அளித்த தகவலை அடுத்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Post

90-வது இந்திய விமானப்படை தினம் : புதிய சீருடை வெளியீடு …

Sat Oct 8 , 2022
90-வது இந்திய விமானப்படை தின நாளில் விமானப்படை வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படைதளத்தில் 90வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர். மேலும் 90வது ஆண்டு நாளான இன்று வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டது. விங் கமாண்டர் குணால் கன்னா மற்றும் விமானப்படைஅதிகாரிகள் சீருடையை அறிமுகப்படுத்தினார்கள். முதல் முறையாக போர் டி-ஷர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விமானப்படை ஸ்டாண்டிங் டிரஸ் கமிட்டி […]

You May Like