செவிலியர் ஒருவர் இளவரசர் ஹேரியிடம் , ’’ டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார்’’ என கூறிய நொடியில் கலங்கிப்போனார் ஹேரி..
லண்டனில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஹேரியின் தாய் டயானாவைப் போலவே தொண்டுள்ளம் கொண்டவர் ஹேரி. அவர் அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு சென்று வருவார். அவர்களுக்கான உதவிகளையும் ஹேரி செய்வது வழக்கம். மேலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஹேரி மனைவி மேகனுடன் கலந்து கொள்வார்.
இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் ஹேரி பங்கேற்றார். குழந்தைகளுக்கு விருதுகளை வழங்கிய பின் அங்கிருந்த செவிலியர் ஒருவர் ’ உங்கள் அம்மா டயானா உயிரோடு இருந்திருந்தால் மிகவும் பெருமைப்பட்டிருப்பார். கோடிகோடியாக பணம் இருந்து என்ன சாதித்தது. நான் ஒரு அம்மாவாக உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகின்றேன்’’.. என்றார்..
இதைக் கேட்ட உடனே.. ஹேரி மனதளவில் கலங்கிப்போனார். உணர்ச்சிமிக்க வார்த்தைகளை செவிலியர் கூறியது அதிர்ச்சிகலந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. எனினும் அமைதியாக தலையசைத்த ஹேரி .. இது மிகவும்இனிமையானது என புன்னைகையுடன் செவிலியருக்கு பதில் அளித்தார்.