பெங்களூருவுக்கு பிரிட்டிஷ் ராணி கமிலா வந்த காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூருவுக்கு திடீரென வருகை தர உள்ள பிரிட்டிஷ்ராணி கமிலா அடுத்த மே மாதம் முறைப்படி ராணியாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் மனைவியும் பிரிட்டிஷ் ராணி ஆக உள்ள கமிலா திடீரென பெங்களூருவுக்கு வந்தார்.
அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சௌக்யா என்ப பகுதிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. 10 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பெங்களூருவில்தங்கி உள்ளதாகவும் அவர் தனது அரச குடும்பத்தினருக்கான சிறப்பு பாதுகாப்பு படையுடன் வந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தனிப்பட்ட பயணம் என கூறும் பிரிட்டிஷ் அரச குடும்ப வட்டாரம் பொதுமைப்படுத்த வேண்டாம் என்று பெங்களூரு காவல்துறைக்கு இதுபற்றி தகவல் கூறப்பட்டுள்ளது. இதுவரை 8 முரை வந்துள்ள கமிலா தற்போது 9 வது முறையாக வந்துள்ளார்.