புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் காலமானார். அவருக்கு வயது 91.
இந்தியா மீது அதிக நாட்டம் கொண்டிருந்தவர் டொமினிக் லாபியர். இவர் உயிரிழந்த தகவலை அவரது மனைவி டொமினிக் கான்சோன்-லாபியர், பிரெஞ்சு செய்தித்தாளான வர்-மாடினுக்கு உறுதி செய்தார். அதில், அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும், டொமினிக் இனி துன்பம் படத்தேவையில்லை. இதனால் தான் மிகவும் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக தெரிவித்தார். டொமினிக் லேபியர் இந்தியாவைப் பற்றி எழுதிய “ஃப்ரீடம் ஆப் மிட்நைட் “, சிட்டி ஜாய் என்ற புத்தகங்கள் மில்லியன் கணக்கில் பிரதிகள் போடப்பட்டன. விற்பனையிலும் சக்கை போடு போட்டன.
ஜூலை 30, 1931ல், சாட்லைலோனில் பிறந்தவர் டொமினிக் லேபியர். இவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று என பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர். இவரது இழப்பிற்கு உலக தலைவர்கள், பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.