கின்னஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு விசித்திரமாகவும் அதே சமயம் அது ஒரு அறிவிப்பாகவும் உள்ளது.
உலக சாதனைகள் பற்றிய அமைப்பான கின்னஸ் வெளியிட்டுள்ள தகவலைப் பற்றி பார்க்கலாம். வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை மோசமான நாளாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும் என காத்திருக்கும் வார நாட்கள் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முடிந்ததும் திங்கள் கிழமையன்று எல்லோரும் நினைக்கும் ஒன்று அட திங்கள் கிழமை வந்துவிட்டதே என அனைவருக்கும் ஒரு சலிப்பாகவும் அலர்ஜியாகவும் இருக்கும். பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் திங்கள் கிழமை என்றாலே அலர்ஜி தான்.
இதை உலக சாதனை அமைப்பான கின்னஸ் மிக மோசமான நாள் என அறிவித்துள்ளது. டுவிட்டரில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சரியாக சொல்லியிருக்கின்றீர்கள் என தெரிவித்துள்ளது.