சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் அவர் தனது அலுவலக நண்பர்களுடன் கேண்டீனில் டீ குடித்துள்ளார். அப்போது அங்கு இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென இறுக்கி அணைத்துள்ளார். அப்போது இளம்பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டுள்ளது. அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத இளம்பெண் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் இரவில் விலா பகுதியில் வலி அதிகமாக இருந்துள்ளது. இதன் படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்துள்ளார். இதன் பின்னர் நேரம் ஆக ஆக வலி அதிகரித்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துள்ளனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து இறுவனத்திற்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக்கி அணைத்து தனது விலா எலும்புகளை உடைத்த இளைஞரிட தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான பில்களை காட்டி பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர், நான் இறுக்கி அணைத்ததால் தான் உனக்கு விலா எலும்புகள் உடைந்தன என்பதற்கு ஆதாரம் என்ன உள்ளது? என்று கூறி சிகிச்சைக்கான செலவை ஏற்க மறுத்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து இளம்பெண் கோர்ட்டை நாடியுள்ளார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பவம் நடந்த பின்னர், இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்புகளை உடைத்துக்கொள்ளவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே, இளம்பெண்ணை இறுக்கி அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10 ஆயிரம் யுவான் இழப்பீடாக அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.