fbpx

அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை லிஸ்ட்ரஸ் நீடிப்பார் !!

கன்சர்வேடிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை லிஸ்ட்ரஸ் பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி தேர்ந்தெடுத்த பின்னர் பிரதமராக லிஸ்ட்ரஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவராக தொடர்ந்து செயல்படுகின்றார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர் அம்புகள் பாய்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவர் பேசுகையில் ’‘ குடும்பங்கள், வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு கட்டணங்கள் செலுத்துவது என கவலையில் ஆழ்தனர். உக்ரைனில் புதின் சட்டவிரோதப் போர் நம் முழு கண்டத்தின் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றது. நாடு குறைந்த பொருளாதார வளர்ச்சியால் நீண்ட காலம் பின்தங்கியிருந்தது. கன்சர்வேட்டிவ் கட்சியால் ஒரு மனதாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இதை மாற்ற , எரிசக்தி கட்டணங்கள் , தேசிய காப்பீடு குறைத்தோம். குறைந்த வரி , உயர் வளர்ச்சி பொருளாதாரம் ,அனைத்தும் வழங்கப்பட்ட போதும் சூழ்நிலையை பொருத்தவரை நான் தேவையானவற்றை வழங்கவில்லை என்பதை நான் உணர்கின்றேன். எனவே நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கின்றேன். இது பற்றி அரசருக்கும் தெரிவித்துள்ளேன். காலையில் நான் சர் கிரகாம் பிராடியை சந்தித்து பேசினேன். அடுத்த வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றார். இது நமக்கு நிதி திட்டங்கள் வழங்கவும் நாட்டின் பொருளாதார ஸ்திர தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை பராமரிக்கவும் ஒரு பாதையில் தொடர்ந்து செல்வதை உறுதி செய்யும் வரை நான் தொடர்ந்து பிரதமராகவே இருப்பேன்.’’ என்றார்.

Next Post

’’தமிழ்நாட்டில் நான் தலையை நுழைப்பேன் , எதை வேண்டுமானாலும் நுழைப்பேன் ’’ – தமிழிசை சவுந்தரராஜன் காட்டம் !!

Thu Oct 20 , 2022
தமிழ்நாட்டில் நான் தலையை நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், எதையும் நுழைப்பேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தவறு நடந்தால் நான் அதை திருத்துவதற்கு எதையும் செய்வேன் என்று தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நான்தெலுங்கானாவுக்கும் , புதுவையில் மட்டமல்ல தவறு நடக்கும் இடத்தில் நான் கேட்பேன். என விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆளுநருக்குண்டான சலுகைகள் பல இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் […]

You May Like