சூரியன் சிரிப்பது போன்ற படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது நாசா . அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் சூரியன். பிளாஸ்மா நிலையில் உள்ள வெப்பமான வாயுக்களை கொண்டதோடு மிகப்பெரிய கோளமாக காணப்படுகின்றது சூரியன் நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜன், ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும்.
சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும். அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிச்சக்தி தாவரங்களின் வளர்ச்சியில் பங்களிக்கிறது. நாம் தாவரங்களில் இருந்து உணவை பெற்றுக் கொள்கிறோம். நாம் தாவரங்களின் மற்றைய பாகங்களை சமையலில் எரிப்பதற்குப் பயன்படுத்துகிறோம்.
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிலும் ஆராய்ச்சியிலும் இவ்விண்வெளி மையம் எந்தநேரமும் இயங்கிக்கொண்டே உள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பணிபுரிந்து விண்வெளி ஆய்வுகளில் முத்திரை பதிக்கின்றனர். இந்நிறுவனத்தின் வழியாக நடைபெற்ற நிலவுப்பயணம், செவ்வாய்க்கோள் பயணம் என்பனவும், வானுலகில் பன்னாட்டு ஆய்வுமையம் அமைக்கும் பணியும் உலக மக்களைவியப்பில்ஆழ்த்துகிறது.
நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் (இந்த கரோனல் துளைகள் மூலம் சூரியனில் இருக்கும் வாயுவை வெளியேற்றும்) சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. இரண்டு கரோனல் துளைகள் கண்கள் போல் தோன்றுகிறது. மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் சிரிப்பது போன்ற குழியை உருவாக்குகிறது. புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த கரோனல் துளைகள், சூரியன் சிரிப்பது போல் தோன்றியது. இந்த புகைப்படம் நாசா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.