fbpx

அடுத்த பாபாவாங்கா : ஹன்னா கரோலின் கணிப்பை கொண்டாடும் மக்கள் ! யார் அவர் ?

 பாபாவாங்காவைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அவர் கூறிய பல விஷயங்கள் நடந்துள்ளது. இதனால் நாம் ஆச்சர்யப்பட்டிருக்கின்றோம். அதே சமயத்தில் ஹன்னா கரோல் என்பவரும் மக்களால் பேசப்பட்டு வருகின்றார்.

பாபாவாங்கா கணித்தை பலரும் நம்புகின்றனர். அது நடக்கும்போது மக்கள் ஈர்க்கப்படுகின்றார்கள். நிச்சயமாக அவர் கணிப்பு உண்மையாகின்றது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 1996லேயே அவர் இறந்துவிட்டாலும்  இன்றளவும் பேசப்பட்டு வருகின்றார்.

தற்போது 19 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சமூக வலைத்தலங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றார். ஹன்னா கரோன் என அழைக்கப்படும் அந்த பெண் 2022ன் 11 முக்கிய நிகழ்வுகளை கணித்துள்ளார். இவர் அடுத்த பாபாவாங்கா என அழைக்கப்படுகின்றார். பாபாவாங்கா எலிசபெத் மகாராணி இறப்பு பற்றி கணித்திருந்தார். தற்போது இவரும் ராணியின் இறப்பை கணித்திருந்ததாக சமூக வலைத்தலங்களில் பேசி வருகின்றனர்.

அமெரிக்காவின் மஸ்ஸாசுசெட் என்ற பகுதியில் வளர்ந்த இவர் 19 வயதிலேயே செய்திகளை கணிக்கத் தொடங்கியுள்ளார். 2022ம் ஆண்டு 28 வகையான நிகழ்வுகளை கணித்துள்ளார். அதில் 11 மிகவும் முக்கியமானவை . அவை உண்மையில் நடந்து முடிந்த ஒன்று. ரிஹன்னாவின் கர்ப்பகாலம் , நிக் ஜோன் பிறப்பு , பிரியங்கா சோப்ராவின் குழந்தை உள்பட பலவற்றை இவர் கணித்துள்ளார்.

ஹன்னாகரோல் , அமெரிக்காவின் மாடல், அமெரிக்க ஊடக பிரபலங்களின் கணிப்புகள் சிலவற்றை கணித்துள்ளார். கோர்ட்டனி கர்தாஷியன் என்ற மாடல் அழகி கர்ப்பமாவார் என கணித்துள்ளார். கென்டல ஜென்னர் நிச்சயதார்த்தம் , ஹெய்லி பைபர் என்ற ஊடக பிரபலத்தின் கர்ப்பம் பற்றியும் கணித்துள்ளார்.

இதன் மூலம் இவர் 75000 பின்தொடர்பாளர்களை கொண்டிருக்கின்றார். ஒருவர் வாழ்வின் தனிப்பட்ட நிகழ்வுகளையும் இவர் கணிக்கத் தொடங்கியுள்ளார் ஹன்னா. இதன்மூலம் 1500 டாலர்கள் மாதத்திற்கு வருமானமாக ஈட்டுகின்றார். அவர் கூறுகையில் ’’ ஏராளமானோரின் வாழ்க்கை கணிப்புகளை நான் கணித்தேன். நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. இவ்வளவு துல்லியமாக எப்படி கணிக்கின்றீர்கள் என அனைவரும் கேட்பார்கள். கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும். நான் இதற்கு முன் இதை என்னுடைய வேலையாக நான் நினைத்ததே இல்லை. ஜனவரி மாதம் என்ன நடக்கும் என்பதை கணித்துள்ளேன் பார்க்கலாம்… அது உண்மையாக இருக்குமா என்ற ஆவலும் நிறையவே உள்ளது. என்றார்.  

Next Post

ஹிந்தி கற்றால் தமிழ்ப்பற்று குறையாது ... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

Sat Oct 8 , 2022
ஹிந்தி கற்க வலியுறுத்தி பா.ஜ. தலைவர்கள் கூறிவரும் நிலையில் நிர்மலா சீதாராமனும் இந்த கருத்தை முன் வைத்ததோடு ஹிந்தி கற்பதால் தமிழ்பற்று குறையாது எனவும் தெரிவித்துள்ளார். சென்னை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்கள் தங்கள் வரி சுரண்டப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். என கேட்டதற்கு சில மாநிலங்களின் வளர்ச்சி வேகமாக நடைபெறும். தமிழ்நாடு பல்வேறு காரணங்களால் வேகமாக வளர்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சிறந்து […]
திடீர் உடல்நலக்குறைவு..!! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி..!!

You May Like