fbpx

’செல்போனை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள்’..! சொல்கிறார் செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர்..!

செல்போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள் என்று முதன்முதலில் செல்போனைக் கண்டுபிடித்தவரான மார்ட்டின் கூப்பர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது. பணப் பரிவர்த்தனை முதல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது வரை ஸ்மார்ட்போன் மூலம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன் இன்று மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கம் ஆகியிருக்கிறது. இந்நிலையில், உலகின் முதல் செல்போனை 1973ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் மார்ட்டின் கூப்பர். இவருக்கு தற்போது 92 வயதாகிறது. இதுகுறித்து அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ‘தினமும் 5 மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? உண்மையில் ஸ்மார்ட்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள்? செல்போன் உள்ளிட்ட சாதனங்களை முடிந்தவரை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள்’ என்றார்.

Martin Cooper | Biography, Inventions, & Facts | Britannica

சிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர் 1973ஆம் ஆண்டு மோட்டரோலா டைனாடிஏசி 8000எக்ஸ் என்ற உலகின் முதல் செல்போனை கண்டுபிடித்தார். மோட்டரோலா நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவந்த மார்ட்டின் கூப்பர். அப்போது கார் போன்கள் மட்டுமே பிரபலமாக இருந்து வந்ததைக் கண்டு சிந்திக்கத் தொடங்கினார். போனை கையில் எடுத்துக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்க வேண்டும் என்று அப்போது அவர் திட்டமிட்டார். அதைத் தொடர்ந்து அவர் செல்போனை உருவாக்கும் திட்டத்தை மோட்டரோலா நிறுவனத்திடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது திட்டத்திற்கு மோட்டரோலா நிறுவனம் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது.

Cell Phone Inventor Martin Cooper on How His Technology Changed the World |  Good Times

இவரது தலைமையிலான குழுவினர் 3 மாதங்களில் செல்போனை கண்டுபிடித்தனர். போலீஸ் ரெடியோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இந்த செல்போனை அவர் உருவாக்கினார். தற்போது அது பல வடிவங்களில் செல்போன் உருமாற்றம் அடைந்து மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் பறிப்பு..! வடமாநில தொழிலாளர்களுக்கு வலைவீச்சு..!

Sun Jul 3 , 2022
புதையலில் பழங்காலத்து தங்கம் கிடைத்ததாக கூறி, ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வடமாநில தொழிலாளர்களை போலீசர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு (45). இவர் அங்கு ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளரிடம் தங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அப்போது […]
சிறந்த முதலீடு..!! தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடக்கம்..!! எவ்வளவு விலை, எப்படி வாங்கலாம்..?

You May Like