தென்னாப்பிரிக்காவில் ஒருவர் 15 மனைவி மற்றும் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியே போதும்டா சாமி .. என்ற கணவன்மார்களின் குரலை கேட்டிருப்போம்.. ஏன்? ஒரு பெண் கூட கிடைக்கவில்லையே என ஏங்கும் 90ஸ் கிட்சை கூட பார்த்துவிட்டோம் .. ஆனால் ஒருத்தரே 15 மனைவிகளை திருமணம் செய்து அவர்களை ஒரே வீட்டில் ஒற்றுமையாக 107 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார் என்றால் வியப்பாகத்தானே இருக்கும்…

தென் ஆப்பிரிக்காவில் கென்யாவில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சகாயோ கலலுயானா. இவருக்கு 61 வயதாகின்றது. இதுவரை இவர் 15 பேரை மணம் முடிந்திருக்கின்றார். மகன் , மகள்கள் என 107 பேர் உள்ளனர். தற்போது இந்த செய்தி பத்திரிகை மற்றும் செய்திகளில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ’’ 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிங் சாலமான எனக்கு முன்மாதிரியாக உள்ளார். அவருக்கு 700 மனைவிகள் 300 பெண் தோழிகளும் இருந்தார்கள். நான் அவரைவிட குறைந்தவன் கிடையாது. நிறைய பெண்கள் என் மீது காதல் கொள்கின்றார்கள். அவர்களுக்கு நான் அறிவாலியாக தோன்றுகின்றேன். அவர்களை சமாளிக்கும் அளவுக்கு என்னிடம் அறிவு உள்ளது. அதனால்தான் நான் இத்தனை பெண்களை திருமணம் செய்துள்ளேன். இதுவரை இவர்களுக்குள் சண்டை வந்ததே கிடையாது. ’’ என்றார்.
அவரது முதல்மனைவி ஜெசிகா கூறுகையில், என் கணவர் புதிதாக ஒரு பெண்ணை மணம் முடித்தால் நான் அதைப் பார்த்து பொறாமை கொண்டது கிடையாது. நல்ல கணவர் அவர் , எப்போது யோசித்து முடிவு செய்வார். அவரது முடிவுகள் சரியாகத்தான் இருக்கும். ’’ என கூறினார்.