ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது மதிப்பில் 29 சதவீதத்தை இழந்துள்ளது. இந்நிலையில் மார்க் ஜுக்கர் பர்க் கூறிய ஒரு வார்த்தையால் பங்குகள் 100 டாலராக குறைந்துள்ளது.
ஃபேஸ்புக்கை விட பல சமூக வலைத்தளங்கள் சிறப்பாக செயல்படுகின்றது. எனவே , கடந்த சில மாதங்களாகவே பங்குகளின் மதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் நிறுவனத்தின் தலைவர் ஜுக்கர் பர்க் கூறிய ஒரு வார்த்தையால் பங்கு 100 டாலராக குறைந்து வர்த்தகமாகின்றது.அவர் அமைதியாக காத்திருங்கள் என கூறியதால் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் நிதி நிலையை சமாளிக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. லாபம் அளிக்காத வர்த்தகத்தை மூடுதல் , சேவைகளை குறைத்தல் என செலவுகளைக் குறைக்கும் பல விதமான நடவடிக்கைகள் நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக் , கூகுள் ,மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சாதகமாக இல்லை.
செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 27.7 பில்லியன் டாலர் வருமான் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் 29 பில்லியன் டர் அளவீட்டை ஒப்பிடும்போது சுமார் 4 சதவீதம் சரிவாகும். இக்காலாண்டில் மெட்டா பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தும் வர்த்தகத்தை மூடியும் உள்ளது. செப்டம்பர் கலாண்டில் 4 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.இதன் எதிரொலியாக மெட்டா பங்குகளின் விலை சரிந்து வருகின்றது. இன்னும் சரியக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.