fbpx

பெரிய குடும்பம் வேணும்…12 மனைவிகள்…102 குழந்தைகள்… டூரிஸ்ட் கைடின் சுவாரஸ்ய கதை!

உகாண்டாவில் 12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகளுடன் 68 வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு உகாண்டாவின் புடலேஜா மாவட்டத்தில் உள்ள புகிசா கிராமத்தில் வசித்து வருபவர் மூசா ஹசஹ்யா கசேரா. 12 மனைவிகள், 102 குழந்தைகளுடன் வசித்தும் வரும் 68 வயதான இவருக்கு தான் இந்த கிராமத்திலேயே பெரிய குடும்பம் உள்ளது. இந்தநிலையில், தற்போது டூரிஸ்ட் கைடாக வேலை பார்த்துவரும் இவர் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், நான் பிறந்த குடும்பம் மிகவும் சிறியது. எனக்கு ஒரு சில சகோதரர்கள் மட்டுமே இருந்தார்கள். எனக்கு பெரிய குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இது பற்றி எனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது என்னை நிறைய திருமணம் செய்துக்கொள்ள கூறினார்கள்.1972ம் ஆண்டு 17 வயதுடைய பெண்ணை முதலில் நான் திருமணம் செய்துகொண்டேன். முதல் மனைவிக்கு சில குழந்தைகள் பிறந்தன. குடும்பம் சிறியதாக இருப்பதாக தோன்றியது. இதனால், அடுத்தடுத்து 12 பெண்களை திருமணம் செய்துகொண்டேன். இளமையாகவும் துடிப்பாகவும் இருந்த காலத்தில் எனக்கு வருமானமும் இருந்தது. எனவே பெண்கள் என்னை நம்பினார்கள். நான் எதிர்பார்த்ததைப் போல என்னுடைய குடும்பம் விரிவானது. குடும்பம் பெரியதாக பெரியதாக அதற்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை என்றும் வயதாக வயதாக எனக்கு என்னுடைய பிள்ளைகளின் பெயர்கள் கூட நினைவில் இல்லாமல் போனது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு உணவும் சரியாக கிடைக்காது எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

காதலை ஏற்க மறுத்த தோழி... ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்ட காதலன்!

Fri Feb 3 , 2023
காதலை ஏற்க மறுத்ததால், ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீண்ட நாள் தோழி மீது காதலன் வழக்கு தொடர்ந்த சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூரை சேர்ந்தவர் காவ்ஷிகன். இவரும் நோரா டான் என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்தநிலையில் நாளடைவில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு தன்னுடைய காதலை காவ்ஷிகன் வெளிப்படுத்தியிருக்கிறார். நட்பாக மட்டும் பழகியதாகவும் அதனால் காதலை ஏற்க […]

You May Like