fbpx

பெண் ஊழியரை திரும்பி நிற்க சொல்லி மேனேஜர் செய்த காரியம்..!! அனைவருக்கும் முன்னாடி இப்படியா செய்வது..?

அலுவலக கூட்டத்தின்போது, பெண்ணின் பின்னாடி அறைந்த மேலாளரின் செயலுக்கு அந்த நிறுவனம் பல லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் பணியாளரை, அலுவலக கூட்டத்தின்போது எழுந்து திரும்பி நிற்கும்படி மேனேஜர் கூறியுள்ளார். அதன்படி, நின்ற பெண்ணின் பின்புறம் அந்த மேலாளரால் அனைவருக்கும் முன்னால் ஒரு ஸ்கேலால் அறைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மேலாளர், “மன்னிக்கவும், இதை செய்ய வேண்டியதாகிவிட்டது” எனக் கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மற்றொரு ஆண் மேலாளரைப் பார்த்து, “அது அனுமதிக்கப்பட்ட ஒன்றா” என கேள்வியெழுப்பியுள்ளார். இரு மேலாளர்களும் அதை நகைச்சுவையாகக் கருதினர். பின்னர் அவர்கள் கூட்டத்திற்கு வந்த மற்ற ஊழியர்களிடம் இதுகுறித்து பேசியுள்ளனர்.

பெண் ஊழியரை திரும்பி நிற்க சொல்லி மேனேஜர் செய்த காரியம்..!! அனைவருக்கும் முன்னாடி இப்படியா செய்வது..?
கோப்புப் படம்

இதையடுத்து, அந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் அந்த பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், தான் மிகவும் அவமானமடைந்து சங்கடத்தில் இருந்ததாகவும், தனது காதலன் மற்றும் தாயிடம் கூட தான் சொல்லவில்லை என்றும் கூறினார். பின்னர் அவர் தாய் மற்றும் காதலரிடம் சில நாட்கள் கழித்து கூறியபோது, அவர்கள் அந்தச் சம்பவத்தை HR மற்றும் மூத்த நிர்வாகத்திடம் தெரிவிக்கும்படி தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை வேலைக்குத் திரும்பப் போவதில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைமையிடம் கூறியுள்ளார். 

பெண் ஊழியரை திரும்பி நிற்க சொல்லி மேனேஜர் செய்த காரியம்..!! அனைவருக்கும் முன்னாடி இப்படியா செய்வது..?
கோப்புப் படம்

இதற்கிடையே, அந்த பெண்ணிடம் சமாதானம் பேச வந்த, அந்நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் யாரையும் அந்த பெண் சந்திக்கவில்லை. அந்த சம்பவத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என விடாப்பிடியாக கூறியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை அடித்த மேலாளர் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். 10 நாட்களாகியும் தனது குற்றச்சாட்டை அவர்கள் ஏற்கவில்லை என்று அந்த பெண் கூறினார். சம்பவம் தொடர்பான விசாரணை 5 வாரங்கள் ஆனது. விசாரணையில் தன்னைப் பற்றி பொய்யான மற்றும் இழிவான கருத்துக்கள் வெளியிடப்பட்டன என்று அந்த பெண் கூறினார். விசாரணைக்கு மேல்முறையீடு செய்து தனது வேலையையும் அந்த பெண் ராஜினாமா செய்தார். முறையற்ற வகையில் உடை அணிந்து வந்ததாக அந்த பெண் மீது அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பெண் ஊழியரை திரும்பி நிற்க சொல்லி மேனேஜர் செய்த காரியம்..!! அனைவருக்கும் முன்னாடி இப்படியா செய்வது..?
கோப்புப் படம்

அதன்பின் அந்த பெண் மேற்கொண்ட மேல்முறையீட்டில், விசாரணை ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 90 ஆயிரம் ஈரோ (ரூ. 90 லட்சம்) இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், மேலாளர் மற்றும் அந்த நிறுவனத்தின் செயல்களால், அந்த பெண் பெரும் அவமானத்தை அனுபவித்ததாக விசாரணை ஆணையம் உறுதி செய்தது. 

Chella

Next Post

’எல்லாம் என் புள்ளையோட நல்லதுக்குதான்’..!! மருமகனுக்கு JCB-யை பரிசளித்த மாமனார்..!! காரணம் என்ன தெரியுமா?

Sun Dec 18 , 2022
உத்தரப்பிரதேசத்தில் மருமகனுக்கு மாமனார் JCB-யை பரிசளித்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பிட்ட குற்ற செயல்களைப் புரிந்தோரின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால், தவறுகள் குறைவதுடன், குற்றம் செய்ய குற்றவாளிகள் அஞ்சும் நிலையும் காணப்படுகிறது. எனவே, உத்தரப்பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறிப் போயுள்ளது. இந்தாண்டில் நடந்த சட்டசபை […]
’எல்லாம் என் புள்ளையோட நல்லதுக்குதான்’..!! மருமகனுக்கு JCB-யை பரிசளித்த மாமனார்..!! காரணம் என்ன தெரியுமா?

You May Like