இங்கிலாந்து பிரதமராக மீண்டும் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் , பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்ட லிஸ்ட்ரஸுக்கு அதிகப்படியான எதிர்ப்புகள் கிளம்புகின்றது. எனவே அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு வருவதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றனது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் பிரதமராக பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பொருளாதார நெருக்கடியால் லிஸ்ட்ரஸ் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் போரிஸ ஜான்சன் சர்ச்சகைளில் சிக்கியதால் பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.
கன்சவர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியானதை அடுத்து லிஸ்ட்ரஸ் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனக் உள்பட ஏராளமானவர்கள் போட்டியிட்டார்கள். இதில் இறுதிக்கட்டத்தில் சுனக் மற்றும் லிஸ்ட்ரஸ் ஆகியோருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியாக லிஸ்ட்ரஸ் தேர்வானார். இதையடுத்து மகாராணியை சந்தித்த பின் பதவியில் அமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது லிஸ்ட்ரஸுக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பணவீக்கத்தை குறைத்து மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும் என அறிவித்தார். இதனால் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார். ஆனால் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது அந்நாட்டு பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. இதனால் கடன் அதிகரித்தது. இது பெரும் பிரச்சனையாக மாறியது.
இந்நிலையில் உரியவகையில் பட்ஜெட் அளிக்கப்படாததால் நிதி அமைச்சர் நீக்கப்பட்டார். அந்த இடத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டே வந்தார். இதனிடையே கட்சியில் பொருளாதார கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெரும்பணக்காரர்களுக்கு பொருந்தும் வகையில் உள்ளதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் சுனக் தேர்வு செய்யப்பட திட்டமிட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கிலாந்து அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.