உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 199 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நோர்வேயின் ஃபோர்டேயில் நடைபெற்று வரும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். வரலாற்றில் இது அவரது மூன்றாவது பதக்கமாகும். இந்தியாவின் மூன்றாவது அதிக உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக 2017 ஆம் ஆண்டு அனாஹெய்மில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 2022 ஆம் ஆண்டு போகோட்டாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
48 கிலோ பிரிவில் மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். வட கொரியாவின் ரி சாங் கம் தங்கப் பதக்கம் வென்றார், அவர் மொத்தம் 213 கிலோ எடையைத் தூக்கினர். சீனாவின் தான்யாதன் மீராபாயுடன் கடுமையான போட்டியை எதிர்கொண்டார், தான்யாதன் வெண்கலப் பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் சுற்றில் தான்யாதன் மீராபாயை விட 4 கிலோ முன்னிலை வகித்தார் . ஆனால் கிளீன் அண்ட் ஜெர்க் சுற்றில், மீராபாய் அற்புதமாக செயல்பட்டு சீன வீராங்கனையை பின்தள்ளி 1 கிலோ முன்னிலையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.



