ஆஹா!. அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரமாக சென்னை தேர்வு!. தூய்மையான நகரம் இதுதான்!. விருது வழங்கிய குடியரசுத் தலைவர்!

Chennai fastest growing city 11zon

தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.


உலகின் தூய்மையான நகரங்கள் பட்டியலுக்கான ஆய்வு 9-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான, ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையைக் கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இதில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. 8வது முறையாக தொடர்ந்து முதலிடம் பிடித்து இந்த பெருமையை தக்கவைத்துக் கொண்டது.

இரண்டாவது இடம் சூரத்திற்கும், மூன்றாவது இடம் நவி மும்பைக்கும் கிடைத்துள்ளது. இதேபோல், இந்தியாவின் பெரிய நகரம் என்ற அந்தஸ்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு கிடைத்துள்ளது. மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம் ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு கிடைத்துள்ளது. அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரமாக சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Readmore: ஆடி முதல் வெள்ளிக்கிழமை!. இதை நைவேத்தியமாக படைத்தால் அம்பாள் வீடு தேடி வருவாள்!. நினைத்த காரியம் நிறைவேற இப்படி வழிபடுங்கள்!

KOKILA

Next Post

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம்..! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு...!

Fri Jul 18 , 2025
தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, முதலில் பணிகளை முடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். […]
MK Stalin dmk 6

You May Like