WPL!… மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி வெளியீடு!… ரோகித்தும், கவுரும் இனி ஒரே அணி கேப்டன்கள்!….

மகளிர் பிரீமியர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


உலக அளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆடவர்களுக்கு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் போலவே பெண்கள் பங்கேற்கும் டி20 லீக் நடைபெறவுள்ளது.Women’s Premier League (WPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டிகள் மார்ச் மாதம் நடைபெறவுள்ளன. ஆடவர் ஐபிஎல் போலவே சென்னை, மும்பை, பெங்களூரு என மொத்தம் 5 அணிகள் பெண்கள் அணிகள் தொடரில் களமிறங்கவுள்ளன.

இந்த 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. அதானி ஸ்போர்ட்ஸ் ஸ்லிங் நிறுவனம் அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கும், இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணியை ரூ.912.99 கோடிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கும், JSW GMR கிரிக்கெட் நிறுவனம் டெல்லி அணியை ரூ.810 கோடிக்கும், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லக்னோ அணியை ரூ. 757 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளன.

அதன்படி, WPL போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக சார்லோட் எட்வார்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடி பெரும் அனுபவத்தை கொண்ட சார்லெட் எட்வார்ட்ஸ் இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்தி ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளை வென்று தந்துள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ஜூலான் கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தேவிகா பல்ஷிகார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ரூ.951 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த அணியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன் ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் நியூசிலாந்தின் சோஃபி டிவைன் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஸ்டாபானி டெய்லர் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி கேப்டன் ரோகித் சர்மாவும், பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன்களாவே இருப்பது ஐபிஎல் மற்றும் மகளிர் ப்ரீமியரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

KOKILA

Next Post

இதற்கு அங்கீகாரம் பெற ரூ.8,000 கட்டணம் செலுத்த வேண்டும்.‌‌..! இல்லை என்றால் சிக்கல்...! ஆட்சியர் அறிவிப்பு...!

Sun Feb 26 , 2023
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை2023 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ‌‌. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள்‌ துவங்குதல்‌,அங்கீகாரம்‌ புதுப்பித்தல்‌, தொழிற்பள்ளிகளில்‌ புதிய தொழிற்‌ பிரிவுகள்‌ / தொழிற்‌ பிரிவுகளில்‌ கூடுதல்‌ அலகுகள்‌ துவங்குதல்‌ ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலமாக வரவேற்கப்படுகின்றன. 28.02.2023 நள்ளிரவு 11:59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற […]
Money 1

You May Like