உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்ட, WWE உலகத்தின் ஜாம்பவான், ஹல்க் ஹோகன் (Hulk Hogan) நேற்று ஜூலை 24, 2025 அன்று 71வது வயதில் காலமானார்.
ஃபுளோரிடாவில் உள்ள க்ளியர் வாட்டர் பகுதியில் வசித்து வந்த ஹல்க் ஹோகன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். WWE வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பாப் கலாச்சாரத்தின் மிகவும் அடையாளம் காணக்கூடிய ஹோகன், 1980களில் WWE உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார். அவரின் மறைவு WWE உலகத்திற்கு பெரும் இழப்பு. ஹோகனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு WWE தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த ஹல்க் ஹோகன்? பெரிய மீசை, மஞ்சல் நிற பனியனில் தோன்றி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக WWE மூலம் ரசிகர்களை ஆட்கொண்டவர் ஹல்க் ஹோகன். சட்டையை கிழித்தபடி களத்திற்குள் இறங்கி பலரையும் பிரம்மிக்கச் செய்வார். இவரது மறைவு செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹல்க் ஹோகனின் மறைவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1985-ம் ஆண்டு நடைபெற்ற முதல் வ்ரெஸ்டில்மேனியாவில் முக்கியமான இடத்தை பிடித்தார். ஆண்ட்ரே தி ஜெயண்ட், ரேண்டி சாவேஜ், ராக், வின்ஸ் மெக்மகன் போன்ற முன்னணி வீரர்களுடன் மோதிய அவர், WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை 6 முறை கைப்பற்றினார்.
Read more: மாணவன் மீது 38 வயது பெண்ணிற்கு வந்த விபரீத ஆசை.. 2 மாதமா லிவிங் டுகெதர் வேற..!! விசாரணையில் பகீர்..