திமுக மாணவர் அணி சார்பில் எங்கள் கல்வி எங்கள் உரிமை மாநில கல்விக்கொள்கை கருத்தரங்கம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், “மாநிலக் கல்விக் கொள்கையின் சாராம்சம் இருமொழிக் கொள்கை தான். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம், மற்றொரு மொழி என்று குறிப்பிடுகிறார்கள். அந்த மற்றொரு மொழி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு ஆறு மொழிகள் தெரியும்; ஆனாலும் என் தாய்மொழி எப்போதும் தமிழ் தான். தேவைக்கேற்ப நான் பிற மொழிகளை கற்றுக்கொண்டேன்,” எனக் குறிப்பிட்டார்.
சிலர் அண்ணா பெயரை வைத்துக் கொண்டு பல்லாக்கில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என் கனவு நீயும், திராவிடன் என்பதை உலகம் முழுவதும் தேட வேண்டும். என்னை பலர் பல பெயர்களில் கூப்பிடுகிறார்கள். நான் எல்லா வேடத்தையும் போட்டிருக்கிறேன். எனக்கு நீ வேஷம் கட்ட வேண்டாம். சரித்திரம் வேறு, புராணம் வேறு என்று புரிந்தவன் நான்.
மீன் எங்கள் கொடியில் இருக்கும், புலி எங்கள் நெஞ்சில் இருக்கும், வில் எங்கள் கையில் இருக்கும். ஆங்கிலத்தில் ‘வில்’ என்றால் வழி உண்டு; அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதற்கு தோள் கொடுப்பதில் எனக்கு பயமே இல்லை,” எனக் குறிப்பிட்டார்.
எனக்கு மூன்று தாய்கள். என்னை பெற்ற தாய் இப்போது இல்லை. மீதமிருப்பது என் சினிமா தாய் மற்றும் என் இந்தியா தாய். இந்த இரண்டு தாய்களுக்காக என் இரண்டு தோள்களும் உண்டு. என்னை யாரும் இடது பக்கம் இழுத்துவிட முடியாது; வலது பக்கம் இழுத்துவிட முடியாது. என் பெயர் கமல்ஹாசன். நான் இந்த குளத்தில் தான் பூப்பேன்,” என அவர் உரையை நிறைவு செய்தார்.
Read more: ரூ.1.33 லட்சம் சம்பளம்.. தமிழ்நாடு அரசில் வீடியோ ஒளிப்பதிவாளர் வேலை.. உடனே விண்ணப்பிங்க..!!