இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதுவரை ஆதார் அட்டையைப் பெறவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை UIDAI எளிமையாக்கியுள்ளது. குடிமக்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் ஆதார் பெறுவது எப்படி..?
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இனி MyGov உதவி மையம் மூலம் நேரடியாக வாட்ஸ்அப்பில் ஆதாரைப் பதிவிறக்க முடியும். இது தற்போது DigiLocker உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியக் குடிமக்கள் செய்ய வேண்டியது இதுதான்.
* உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மையத்தின் அதிகாரப்பூர்வ எண்ணான +91-9013151515-ஐ சேமிக்கவும்.
* இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் வழியாக ஆங்கிலத்தில் ‘Hi’ என்று அனுப்பவும்.
* பின்னர், சாட்பாட் கேட்கும் வழிமுறைகளை பின்பற்றி சென்று, உங்கள் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இருப்பினும், இந்த வசதியைப் பயன்படுத்த, உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கனவே டிஜி லாக்கரில் சேமித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த சேவை 24×7 எப்போதும் கிடைக்கும் என்றும், அவசர காலங்களில் இது மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது. ஆனால், வாட்ஸ்அப் மூலம் ஒரு நேரத்தில் ஒரு ஆவணத்தை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.