தேசிய தொழிற் சான்றிதழ் மற்றும் மின் கம்பியாள் உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!! – முழு விவரம்! 

job

2026 ஜூலை மாதம் DGT (Directorate General of Training) மூலம் அகில இந்திய தொழிற்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக மாநில அளவிலான முதனிலைத் தேர்வு மற்றும் மின்கம்பியாளர் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 2025 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளன.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

முதல் வகை: ஏதேனும் தொழிற்பிரிவில் ஐடிஐ பயிற்சி முடித்த முன்னாள் பயிற்சியாளர்கள், 1 வருட அனுபவம் கொண்டவர்கள்.

இரண்டாம் வகை: திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், தாங்கள் பயின்ற தொழிற்பிரிவில் 1 வருட அனுபவம் கொண்டவர்கள்.

மூன்றாம் வகை: ஆகஸ்ட் 2018 வரை மாநில தொழிற்பயிற்சி குழுமத்தில் சேர்த்து, ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள்.

நான்காம் வகை: பிற விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 21 வயது, தொழிற்பிரிவில் 3 ஆண்டு அனுபவம் தேவை.

முதனிலை தேர்வு 2025:

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கும் நபர்கள் தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

முதல் வகை மற்றும் நான்காம் வகை தேர்வர்கள் முதனிலைத் தேர்வுகள் 2 வகையாக நடைபெறும். கருத்தியல் (Theory) தேர்வு வரும் 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறைத் தேர்வு 05.11.1025 என நடைபெறும். கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்வு நடைபெறும்.

கருத்தியல் தேர்வு விரிவாக எழுதும் வகையில் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்கள் செய்முறைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு ஜூலையில் நடைபெறும் அகில இந்திய தொழிற் தேர்விற்கு தனித்தேர்வர்களாக எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு டெல்லி DGT மூலம் தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) அனுப்பப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கல்வித்தகுதி மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பி, தொழிற்பயிற்சி நிலையங்களில் முதல்வர்களிடம் நேரடியாக 08.10.2025 தேதிக்குள் வழங்க வேண்டும்.

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 2025:

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

  • துறையால் நடத்தப்படும் மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பயிற்சி பெற்றவர்கள்.
  • தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் மின்சார/கம்பியாள் தொழிற்பிரிவில் பயிற்சி பெற்றவர்கள்.

தகுதி:

  • மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 வருட அனுபவம்
  • குறைந்தபட்ச வயது: 21
  • அதிகபட்ச வயது வரம்பு: இல்லை

விண்ணப்பம் செய்யும் முறை:

  • இணையதளம்: https://www.skilltraining.tn.gov.in/
  • விண்ணப்பங்களை தகுந்த மையத்திற்கு நேரடியாக அனுப்ப கடைசி தேதி: 17.10.2025.

Read more: Alert : சமையலுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்துறீங்களா?.. கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்..!

English Summary

You can apply for the National Vocational Certificate and Electrician Assistant Examination..!

Next Post

Breaking : ஹேப்பி நியூஸ்.. 2 நாட்களில் ரூ.1,040 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

Thu Sep 25 , 2025
Gold prices today fell by Rs. 720 per sovereign and are being sold at Rs. 84,080.
gold price prediction

You May Like