சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தரக் குடும்பத்தினரின் பெரிய லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. புதிதாக கார் வாங்க முடியாத பலர், பழைய கார்களை வாங்கி தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை வெறும் ரூ.3 லட்சத்துக்குச் சட்டப்பூர்வமான முறையில் வாங்குவதற்கான ஒரு வழிமுறை குறித்து இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் கார் வாங்கக் கடன் பெறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அந்தக் கடன் தவணைகளைச் சரியாகத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும்போது, சம்பந்தப்பட்ட வங்கிகள் அந்தக் கார்களைப் பறிமுதல் செய்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட கார்களைத் தங்களிடமே வைத்திருப்பதில் வங்கிகளுக்கு ஆர்வம் இருப்பதில்லை. ஏனெனில், அவற்றின் முதன்மையான நோக்கம் கடனாக வழங்கிய பணத்தைத் திரும்பப் பெறுவது மட்டுமே.
எனவே, வங்கிகள் இந்தக் கார்களை விரைவாக ஏலத்திற்கு விடுகின்றன. இப்படி ஏலம் விடும்போது, சில சமயங்களில் கார்களின் அசல் மதிப்பில் இருந்து 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் அவற்றை வாங்க முடியும். இருப்பினும், இந்த ஏலங்கள் குறித்துப் பொதுமக்களுக்குச் சரியாகத் தெரிவதில்லை. ஏலம் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் சில உள்ளூர் செய்தித்தாள்கள் அல்லது தனிப்பட்ட வலைத்தளங்களில் மட்டுமே வெளியாவதால், அவை பொதுமக்களைச் சென்றடைவதில்லை.
இதற்கான அதிகாரப்பூர்வமான மற்றும் வெளிப்படையான தீர்வு ஒன்று உள்ளது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள eauctionsindia.gov.in என்ற இணையதளம் மூலமாக இந்த ஏல விவரங்களை எவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
கார் ஏல விவரங்களை அறிவது எப்படி..?
* eauctionsindia.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று உள்நுழைய (Login) வேண்டும்.
* அங்குக் கொடுக்கப்பட்டுள்ள ‘property’ (சொத்து) பிரிவில், ‘all category’ என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் கார் அல்லது உங்களுக்குத் தேவையான வாகனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
* பின்னர், நீங்கள் விரும்பும் வங்கியின் பெயர் (Bank) மற்றும் நகரம் (Auctions by city) ஆகியவற்றைத் தேர்வு செய்தால், அந்தப் பகுதியில் நடைபெறும் வாகன ஏலம் தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைக்கும்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்னர், நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, உங்களுக்குத் தேவையான வாகனம் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் நீங்களே நேரடியாகப் பேசி, பெருமளவிலான தள்ளுபடி விலையில் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை வாங்க முடியும். இதன் வழியே, ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை ரூ.3 லட்சத்திற்கு குறைந்த விலையில், 100% சட்டபூர்வமான முறையில் வாங்க முடியும்.
Read More : மனிதர்களுக்கு மரண வாய்ப்பை தரும் 10 விலங்குகள்..!! ஒரே கடிதான்.. உயிரே போயிரும்..!! எச்சரிக்கையா இருங்க..!!