சென்னையில் இன்றைய (ஜூன் 12, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்றவைகளே காரணம்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது. தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.72,000ஐ தாண்டி புது வரலாறை படைத்தது. பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (12.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,480-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.59,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமேதுமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read more: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்..