Clean blankets: குளிர்காலத்தில் தான் போர்வைகளை அதிகம் பயன்படுத்துவோம். கொசுக்கடியை தவிர்க்கும் விதமாகவும் சிலர் இருக்கமான ஆடைகளை அணியக் கூடும். மேலும் தினமும் மெத்தை விரிப்புகளாகவும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை சுத்தம் செய்வது பலருக்கு கடினமாக இருக்கலாம். மற்ற ஆடைகளை போல போர்வைகளை ஒருமுறை துவைக்கும் போது அவற்றை உலர செய்வது என்பது மிக கடினமான காரியமாக இருக்கும். இது பல நேரங்களில் இல்லத்தரசிகளுக்கு டென்ஷனை ஏற்படுத்தலாம். இதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.
தடிமனான போர்வைகளின் மேற்பகுதி பருத்தியால் ஆனது. அவற்றை தண்ணீரால் கழுவ கூடாது. முதலில் போர்வையை தரையில் விரித்து அதனை ப்ரஷ் மூலம் அதன் மேற்பரப்பில் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் மேற்பரப்பில் உள்ள அழுக்கு மற்றும் கரைகள் ஓரளவு வெளியேறிவிடும். போர்வையை தரையில் நன்றாக விரித்து அதன் மீது பேக்கிங் சோடாவை தெளிக்கலாம்.
அரை மணி நேரம் கழித்து ஒரு பிரஷ் மூலம் சுத்தம் செய்யும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கும். இதன் பின்னர் போர்வைகளை சூரிய ஒளியில் நன்றாக காய வைக்கும் போது அதில் உள்ள கிருமி நச்சுகள் நீங்கிவிடும். கம்பளி போர்வைகளை காற்று புக முடியாத பெட்டி அல்லது பையில் வைக்க வேண்டும் இதன் மூலம் பூச்சிகள் கம்பளிப் போர்வைக்குள் செல்லாத வகையில் பாதுகாக்கலாம்.