சமூக வலைதளங்களில் அரசு திட்டங்கள் தொடர்பாக பல்வேறு போலி தகவல்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது, பொதுமக்கள் தினமும் எளிதாக பணம் சம்பாதிக்க உதவும் ஒரு முதலீட்டு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக கூறும் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது!
அரசு முதலீட்டுத் திட்டத்தில் குடிமக்கள் 24 மணி நேரத்தில் ரூ.60,000, மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்று இந்தப் பதிவு கூறுகிறது.
எனினும் மத்திய அரசின் PIB உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம், குடிமக்கள் இந்த தவறான செய்திகளுக்கு இரையாகக்கூடாது என்று கூறியுள்ளது. நிதியமைச்சர் சீதாராமன் அத்தகைய எந்த உரிமைகோரல் வீடியோக்களையும் ஆதரிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது..
PIB உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.. அதில் “ மாதம் ரூ.1 லட்சம் உறுதியளிக்கும் தேசிய தளத்திற்கு மக்கள் ஏமாறக்கூடாது என்று கூறியுள்ளது. இந்தச் செய்தி ஒரு போலி விளம்பரம் என்றும், இது ஒரு செய்திக் கட்டுரை என்ற போர்வையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது..
அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ‘குவாண்டம் AI’ என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படும் தேசிய முதலீட்டு தளம், மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரத்தை வழங்கும் என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவதாக உறுதியளிக்கும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால் இது போலி செய்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்தி ஏதேனும் உங்களுக்குக் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம், மேலும் அந்தச் செய்தி உண்மையானதா அல்லது அது போலியான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, நீங்கள் https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். மாற்றாக, உண்மைச் சரிபார்ப்புக்காக +918799711259 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவல் https://pib.gov.in என்ற முகவரியிலும் கிடைக்கிறது.
Read More : குட்நியூஸ்! ரூ.4.48 லட்சம் தள்ளுபடி..!! அதிரடியாக குறைந்த கியா கார் விலை.. முழு விவரம் இதோ!