EPFO | நீங்கள் மாத ஊதியம் பெறும் ஊழியராக இருந்தால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் உங்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை உங்கள் நிறுவனமும் சேர்த்து பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்தத் தொகை உங்கள் ஓய்வுக் காலத்திற்கு பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கு உதவும்.
நிறுவனம் செலுத்தும் தொகை 3 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் 3.67% EPF கணக்கிற்கும், 8.33% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), மீதித் தொகை இன்சூரன்சுக்கும் செல்கிறது.
பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் பலன்கள் :
உங்கள் நிறுவனம் செலுத்தும் 8.33% EPS தொகைதான், ஓய்வுக்குப் பிறகு நீங்கள் பெறும் மாத ஓய்வூதியத்திற்கு அடிப்படையாக அமைகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் EPF-ல் பங்களித்திருந்தால், 58 வயதிற்குப் பிறகு நீங்கள் மாத பென்ஷன் பெற தகுதி ஆனவர்கள். மேலும், EDLI திட்டத்தின் கீழ், ஊழியர் எதிர்பாராதவிதமாக இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் பலன்கள் வழங்கப்படும்.
தற்போது, ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியான அதிகபட்ச சம்பளம் ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக ரூ.1,250 பென்ஷன் பங்களிப்பு செய்ய முடியும். சமீபத்தில், EPFO சில விதிகளில் மாற்றம் செய்து, ஒரு மாதம் பணிபுரிந்தவர்களுக்கும் பென்ஷன் பலன்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இது, தற்காலிக ஊழியர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
பி.எஃப் தொகையை எடுப்பதற்கான விதிகள் :
5 வருட சேவை காலத்திற்கு முன் பணம் எடுத்தால் வரி செலுத்தத் தேவையில்லை. திருமணம், வீடு கட்டுதல், மருத்துவச் செலவு அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற அவசரத் தேவைகளுக்குப் பாதி அளவு தொகையை எடுக்கலாம். பணி ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை விட்டு 2 மாதங்கள் கழித்து முழுத் தொகையையும் எடுக்க முடியும்.
உங்கள் பி.எஃப் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதையும், உங்கள் EPS பங்களிப்பு ஆக்டிவாக உள்ளதா என்பதையும் EPFO இணையதளத்தில் உள்ள ‘EPF பாஸ்புக்’ பகுதியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சரியான திட்டமிடலுடன் பி.எஃப் கணக்கை முறையாகப் பயன்படுத்தினால், அது உங்கள் எதிர்காலத்திற்குப் பெரிய உறுதுணையாக இருக்கும்.



