ஒரு முறை சார்ஜ் செய்தால் 631KM வரை செல்லலாம்..! ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்…

அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டுள்ளன. இந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தால் களமிறக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் கார்தான் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). கடந்த ஜனவரி மாதம்தான் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக ஹூண்டாய் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.


ஹூண்டாய் நிறுவனத்தின் E-GMP பிளாட்பார்ம் அடிப்படையில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். 800V ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு இந்த பேட்டரி சப்போர்ட் ஆகும். இது பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக ஹூண்டாய் ஐயோனிக் 5 திகழ்கிறது.

இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார்தான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான போட்டி மாடல் ஆகும். கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே அதன் ஆரம்ப விலை 60.95 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது.

எனவே வரிகள் குறைவு என்பதால், இதன் விலையும் குறைவாக இருக்கிறது. முக்கியமான போட்டியாளரான கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது விலை மிகவும் குறைவாக இருப்பதுதான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பிரம்மாண்டமான வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

RUPA

Next Post

ஜெயிலர் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்..!

Wed Jul 12 , 2023
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் கோட்டையான கேரளாவுக்கு சென்று மாவீரன் படத்தை விளம்பரம் செய்தார் சிவகார்த்திகேயன். அப்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் நீங்கள் கவுரவத் தோற்றத்தில் வருவதாக பேசப்படுகிறதே. […]
rajni Sivakarthikeyan

You May Like