இணைய வழியில் முதலீடு செய்யும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அஞ்சல் அலுவலகங்கள் பல கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். குறைந்த முதலீட்டில் சிறப்பான வட்டி வருமானம் பெற விரும்புவோருக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ‘டைம் டெபாசிட்’ என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் எந்தத் தொகை வரையிலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு வயது வரம்பு கிடையாது என்பது ஒரு கூடுதல் சிறப்பு. முதலீட்டின் காலம் மற்றும் தொகைக்கு ஏற்ப, 6.9% முதல் 7.5% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
முதலீடு மற்றும் வட்டி : இந்த திட்டத்தில், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றே முதலீட்டாளர் முழு தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும்.
முதிர்வு காலம் : 5 வருட முதிர்வு காலம் முடிந்ததும், வட்டியுடன் சேர்த்து அசல் தொகையும் முதலீட்டாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்படும்.
வரி சலுகை : இத்திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரி சலுகையும் உண்டு.
முதிர்வு வட்டி விகிதங்கள் :
1 வருடம் – 6.9%
2 வருடம் – 7.0%
3 வருடம் – 7.1%
5 வருடம் – 7.5%
உதாரணமாக, 7.5% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.1,44,995 கிடைக்கும். அதாவது ரூ.44,995 வட்டியாகக் கிடைக்கும். இதே வட்டி விகிதத்தில் ₹5 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு தொகையாக ரூ.7.21 லட்சம் கிடைக்கும். இந்த தொகையை மீண்டும் முதலீடு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.10.40 லட்சமாகப் பெருகும். அதாவது, முதலீட்டைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம், வட்டியின் உதவியுடன் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி..?
இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்திற்குச் சென்று, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் முதலீடு செய்ய விரும்பும் தொகையைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
Read More : உங்களுக்கு சளி, காய்ச்சல் இருக்கா..? வீட்டு வைத்தியம் செய்யப்போறீங்களா..? அப்படினா முதலில் இதை படிங்க..!!