டொனால்டு ட்ரம்ப் கோல்டு கார்ட் முதலீட்டாளர் அமெரிக்க விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்ப் தனது சமூக ஊடகமான Truth Social-ல் இதுபற்றி அறிவித்தார். அதன்படி, இணையதளம் தற்போது செயல்படத் தொடங்கி, 1 மில்லியன் டாலர் அமெரிக்க விசா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
ட்ரம்ப் இந்த கோல்டு கார்டு திட்டத்தை இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் ஒரு செயலகத் திருத்து (executive order) மூலம் தொடங்கினார். இப்போது அந்த உத்தரவு அமெரிக்க மத்திய அரசு மூலம் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது..
ட்ரம்ப் இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ இன்று அமெரிக்க அரசின் ட்ரம்ப் கோல்ட் கார்டு அதிகாரபூர்வமாகவே வந்துவிட்டது! தகுதியுடையவர்களுக்கு குடியுரிமைக்கு நேரடி பாதை. எங்கள் பெரிய அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான திறமையான பணியாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இது மிகவும் உற்சாகமானதானது!”
கோல்ட் கார்டு விசா திட்டம்
டொனால்டு ட்ரம்பின் புதிய தங்க அட்டை (Gold Card) குடியேற்ற/விசா திட்டம் ஒரே மாதிரியல்லாமல் பல அடுக்கு/வகைகளில் வருகிறது. கோல்ட் கார்டு, கார்ப்பரேட் கோல்ட் கார்டு என்ற இரு வகைகளில் வருகிறது.. பிளாட்டினம் எனப்படும் வேறு ஒரு திட்டமும் விரைவில் அறிமுகப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் மிக அதிகபட்சம் 270 நாட்கள் விசாவுடன் தங்க அனுமதி கிடைக்கும்.
இதில் கோல்டு கார்டு திட்டம், குடியுரிமைக்காக (Citizenship) நேரடியாக விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கானது. கார்ப்பரேட் கோல்ட் கார்டு என்பது ஒரு நிறுவனத்தின் ஆதரவுடன் (corporate sponsor) பணியாளராக அமெரிக்காவிற்கு செல்ல விரும்புவோருக்கானது.
கட்டணம் – விரிவான விளக்கம்
விண்ணப்பக் கட்டணம்:
15,000 டாலர் (விண்ணப்பம் + செயலாக்கக் கட்டணம்). இதை திரும்ப பெற முடியாதது (Non-refundable).. கிரெடிட் கார்டு, ஏசிஹெச் டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.. விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டபின், 1 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்.. அதாவது இந்திய மதிப்பி சுமார் 8.2 கோடி ஆகும்.. இது ஒருமுறை மட்டும் செலுத்த வேண்டிய கட்டணம் ஆகும்.. இதை செலுத்தினால் தான் செயல்முறை முடிவடையும்.
கார்ப்பரேட் கோல்ட் திட்டத்தில் நிறுவனமே செலுத்த வேண்டிய கட்டணம்: 15,000 டாலராகும்.. (விண்ணப்பம் + செயலாக்கம்). இந்த கட்டணத்தை திரும்ப பெற முடியாது.. விண்ணப்பம் அனுமதிக்கப்பட்ட பின் 2 மில்லியன் டாலர் பணத்தை நிறுவனமே செலுத்த வேண்டும்..
விண்ணப்பிக்க கடைசி தேதி இருக்கா?
இணையதளம் தற்போது செயல்பாட்டில் உள்ளது; விண்ணப்பங்கள் ஏற்கப்படும் நிலையில் உள்ளது. இந்தத் திட்டம் எப்போதுவரை திறந்திருக்கும் என்பது அரசால் அல்லது இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை. கடைசி தேதி பற்றிய தகவல் இணையதளத்தில் இல்லை. அதாவது, வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாமா? என்ற கேள்விக்கும் தெளிவான பதில் இப்போது இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
அதிகாரப்பூர்வ இணையதளம் (official website) மூலம் நேரடியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் application form பூர்த்தி செய்தால் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
படி 1: உங்களுடைய இணைய உலாவியில் https://trumpcard.gov என்ற இணையதளத்தை பார்வையிடவும்..
படி 2: தளத்தில் ‘Apply Now’ (இப்பொழுது விண்ணப்பிக்க) என்ற பொத்தானை கிளிக் செய்யவும் — அது விண்ணப்பப் பேஜ்/போர்டலை திறக்கும்.
படி 3: திறக்கப்படும் போர்டலில் கேட்டிருக்கும் தகவல்களை முறையாக நிரப்பவும்.
பெயர், பாஸ்போர்ட் விவரம், தொடர்பு எண்கள், முகவரி, வேலை/நிறுவன விவரம் போன்ற தேவையான எல்லா புலங்களையும் அதிகாரபூர்வமானச் சான்றுகளுக்கு ஏற்ப மெய்ப்பிக்கவும்.
தகவல்கள் தவறாக இருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி ஆகக்கூடும்; ஆதலால் உங்களிடம் தேவையான ஆவணங்களின் ஸ்கேன்/படிகளை தயார் கொண்டு இருப்பது நல்லது.
படி 4: அனைத்து விவரங்களும் சரி என உறுதி செய்தபின் ‘Continue to payment’ என்று அழைக்கப்படும் அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
படி 5: கட்டணத்தைச் செலுத்தவும்:
தளம் அனுமதித்தால் அவசரமாகவே சர்வதேச அல்லது அமெரிக்க கடன் அட்டையை (international/US credit card) பயன்படுத்தி செலுத்தலாம், அல்லது ACH debit (US வங்கிக் கணக்கிற்கு இணையான) வழியாகவும் செலுத்தலாம்.
கட்டணம் அனுப்பும் முன், இணையதளத்தில் உள்ள பாதுகாப்பு சான்றுகள் (HTTPS, ப்பேமென்ட் சேவையகத்தின் நம்பகத் தகவல்கள்) சரிபார்க்கவும். கட்டணம் ஒருமுறை திரும்பப் பெற முடியாததாக இருந்தால் அது குறித்து முன் தெரிந்து கொள்ளவும்.



