“நீ அந்த தொழிலுக்கு போ”..!! மருமகளை விபச்சாரத்தில் தள்ளிய மாமியார் குடும்பம்..!! பச்சிளம் குழந்தையுடன் தாய் எடுத்த விபரீதம்..!!

Crime 2026 8

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் நகரில், ஒரு வயது குழந்தைக்கு தாயான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கணவர் வீட்டார் கொடுத்த கடுமையான நெருக்கடி மற்றும் சித்திரவதை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


பால்கி பகுதியைச் சேர்ந்த அஞ்சனாபாய் என்பவருக்கும், பசவகல்யாண் நகரைச் சேர்ந்த சேகர் பாட்டீல் என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், ஓஎம் லேஅவுட் பகுதியில் உள்ள தனது வீட்டில் அஞ்சனாபாய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை விஜய் குமார் அளித்த புகாரில், தனது மகளை அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

திருமணம் முடிந்தது முதலே அஞ்சனாபாய் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்ததாக தெரிகிறது. கணவர் வீட்டார் அவரை தவறான உறவுகளை வைத்துக்கொள்ள சொல்லி வற்புறுத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் உயிரை மாய்த்து கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு பெண் தனது சொந்த கணவர் வீட்டிலேயே இத்தகைய கொடுமைகளை சந்தித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகார் தொடர்பாக பசவகல்யாண் நகர போலீசார் கடந்த 6-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். அஞ்சனாபாயின் கணவர் சேகர் பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு இளம் தாயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Read More : ஆண்களே..!! தாம்பத்திய உறவில் ‘கிங்’காக இருக்கணுமா..? ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள்..!!

CHELLA

Next Post

டிக்கெட் பதிவு முதல் உணவு ஆர்டர் வரை..!! புதிய செயலியை அறிமுகம் செய்த இந்திய ரயில்வே..!! உடனே டவுன்லோடு பண்ணுங்க..!!

Tue Feb 10 , 2026
ரயில் பயணிகளின் வசதிக்காக நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த UTS செயலிக்கு விடை கொடுத்து விட்டு, அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு இந்திய ரயில்வே மாறுகிறது. அதன்படி, வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் UTS செயலியின் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட UTS செயலி, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், […]
Train 2026 1

You May Like