சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை ஏற்க உச்ச் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..
இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.. இருப்பினும் குழந்தைகள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடும் போது, அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பலர் சமூக வலைதளங்களில் இருந்து விலக முடியாமல் அடிமையாகி விடுகிறார்கள்.. குறிப்பாக குழந்தைகள் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது பல எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் 14 முதல் 18 வரையிலான சிறுவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்த முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் இந்த மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.. இந்த மனு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி “ நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முயற்சி செய்யப்பட்டது.. ஆனால் அதற்கு பின் நேபாளத்தில் என்ன நடந்தது என பார்த்தீர்கள் தானே..” என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் நேபாளத்தில் எழுந்த எதிர்ப்பு சுட்டிக் காட்டிய தலைமை நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.



