“ மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்..” உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

udhayanidhi stalin

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. உதயநிதி பிறந்தநாளை திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன.. உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அன்னதானம் வழங்கி திமுக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. மேலும் அரசியல் பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..


இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் “ கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக – விளையாட்டுத் துறை அமைச்சராக – மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : Flash : “அண்ணனின் அரசியல் அனுபவம் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும்..” செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ..!

RUPA

Next Post

11 பேர் பலி.. சீனாவில் ஊழியர்கள் மீது ரயில் மோதி விபத்து.. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்து..!

Thu Nov 27 , 2025
சீனாவின் தெற்கு யுன்னான் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த ஒரு ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குன்மிங் ரயில் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. குன்மிங் நகரிலுள்ள லுயோயாங் டவுன் ரயில் நிலையத்தின் வளைவு பகுதியில், நிலநடுக்கத்தை கண்டறியும் சோதனைகள் நடத்தி வந்த ரயில், பாதையில் இருந்த தொழிலாளர்கள் மீது மோதிய போது இந்த விபத்து நடந்தது.. சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங் அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ […]
train 1 1

You May Like