கோவை பூ மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு, சட்டக் கல்லூரி மாணவிக்கும் நடந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஜனனி (வயது 20), செப்.21-ஆம் தேதி கோவை பூ மார்க்கெட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் உடை குறித்து அங்கிருந்த பூ வியாபாரி ஒருவர் விமர்சித்துள்ளார். அப்போது, அந்தப் பெண் இது அரைகுறை ஆடையா? ஒருத்தர் அணியக்கூடிய உடை அவர்களின் உரிமை என பதிலுக்கு அந்த மாணவி பேசுகிறார். இந்த சம்பவத்தை ஜனனியுடன் வந்திருந்த நண்பர், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பூ மார்க்கெட் வியாபாரிகள் ஜனனியிடம், “பூ மார்க்கெட்டிற்கு அரைகுறை உடை அணிந்து வரக் கூடாது, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு ஜனனி, “உடை என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை. எந்த உடை அணிய வேண்டும் என்று நீங்கள் சொல்லக் கூடாது.
மார்க்கெட்டுக்கு வருவோர் எந்த உடை அணிந்து வரவேண்டும் என யாராவது சொல்லியிருக்காங்களா..? இல்லையென்றால், அதை லிஸ்ட் போட்டு வெளியே போர்டு வைத்துவிடுங்கள். நான் நீதிமன்றம் மூலம் அதை அகற்ற உத்தரவு பெற்றுத் தருகிறேன். நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் போதும். நான் அணிந்திருக்கும் உடை என் விருப்பம்” என்று பேசியுள்ளார்.
மேலும் வியாபாரிகளிடம், “நீங்கள் புகார் அளிக்க விரும்பினால், நீங்கள் யார், பெயர், சங்க நிர்வாகி யார் என்று தெரிவித்து, ஒரு மனு கொடுங்கள்” என்று சவால் விடுகிறார். பின்னர், அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்ததை அடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனர்.
ஆனால், இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய நிலையில், மாணவி ஜனனி தரப்பில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவி ஜனனி மற்றும் அவரது நண்பர் மீது பூ வியாபாரிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More : நடைபயிற்சி செல்லும் முன் என்ன சாப்பிடலாம்..? டைமிங் ரொம்ப முக்கியம்..!! இப்படி நடந்தால் ஆயுள் கூடும்..!!



