ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார்க் பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. பல இடங்களில் மணப்பெண் தேடி வந்த நிலையில், ஜிதேந்திரா என்பவர் அந்த இளைஞரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தன்னை திருமண புரோக்கர் என்று அறிமுகம் கொண்டார்.
மேலும், ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளதாகவும், அவரை இளைஞருக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் உறுதியளித்ததால், இளைஞரின் வீட்டாரும் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, ஜிதேந்திரா சுமார் 27 வயதான பெண்ணை அறிமுகம் செய்து வைத்த நிலையில், அவரை இளைஞரின் குடும்பத்திற்கு பிடித்துவிட்டது.
இதையடுத்து, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. இதற்கிடையே, புரோக்கர் பணம் ரூ.2 லட்சத்தை ஜிதேந்திரா இளைஞரின் வீட்டாரிடம் வாங்கிக் கொண்டார். பின்னர், ஜெய்ப்பூரில் திருமணமும் கோலகலாமாக நடந்து முடிந்தது. அதன்பிறகு கிஷான்கார்க் பகுதிக்கு புதுமண ஜோடி வந்தனர்.
பின்னர், அன்றிரவு இருவரும் முதலிரவு கொண்டாடுவதற்காக அறைக்கு சென்றுள்ளனர். ஆனால், அப்போது அந்த பெண், ”இன்று முதலிரவு வேண்டாம் என்றும், எங்கள் பாரம்பரியப்படி முதலிரவில் கணவன் – மனைவி சேர்ந்து இருக்கக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அந்த இளைஞர், ஒரே அறையில் தனித்தனியாக படுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், விடியற்காலை 3 மணியளவில் மாப்பிள்ளைக்கு திடீரென முழிப்பு வந்துள்ளது. அப்போது, தனது மனைவியை பார்த்தபோது, அவர் அங்கு இல்லை. பின்னர், வீடு முழுவதும் தேடி பார்த்தபோதும் எங்கும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த நகை, பணமும் மாயமாகியிருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோதும், அவர் ஃபோனை அணைத்து வைத்துள்ளார். புரோருக்கருக்கு போன் போட்டாலும் எடுக்கவில்லை. இதனால், இதனால் இருவரும் சேர்ந்து தான் இந்த மோசடி செய்திருப்பதாக சந்தேகித்த இளைஞரின் குடும்பத்தினர் உடனே போலீசிடம் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : இதை கவனிச்சிருக்கீங்களா..? ரயில் நிலையங்களில் மெடிக்கல் ஷாப் ஏன் இல்லை..? பலருக்கும் தெரியாத தகவல்..!!