டெல்லியில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது மாதவிடாயை நிறுத்த ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டார், இதனால் அவருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு ஏற்பட்டது. மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்திய போதிலும், அவரின் தந்தை மறுத்ததால், அந்த பெண் பெண் நள்ளிரவில் இறந்தார். அப்பெண்ணுக்கு ஸ்கேன் செய்ததில் தொப்புள் வரை இரத்த உறைவு இருப்பது தெரியவந்ததாக வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேகானந்த் கூறினார்.
Rebooting The Brain Podcast-ல் பேசிய வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் விவேகானந்த், ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT)-யின் அமைதியான ஆபத்து குறித்துப் பேசினார். கடுமையான கால் வலி மற்றும் வீக்கத்துடன் 18 வயது இளம்பெண் இறந்ததாகவும் டாக்டர் விவேகானந்த் நினைவு கூர்ந்தார்..
18 வயது இளம்பெண் தனது நண்பர்களுடன் தனது மருத்துவமனைக்கு வந்ததாக மருத்துவர் கூறினார். மேலும் “ அப்பெண்ணுக்கு கால்கள் மற்றும் தொடைகளில் வலி மற்றும் வீக்கம் இருந்தது. மேலும் அவருக்கு மிகவும் சங்கடமாகவும் இருந்தது. மருத்துவர் அவரிடம் இது எப்போது தொடங்கியது என்று கேட்டபோது, வீட்டில் ஒரு பூஜை காரணமாக, மாதவிடாய் நிறுத்த சில ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக அப்பெண் சொன்னார்..
நாங்கள் அவளை ஸ்கேன் செய்தபோது, அவளுக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு இருப்பது கண்டறியப்பட்டது என்றும், ரத்த உறைவு அப்பெண்ணின் தொப்புள் வரை இருந்து… அப்பெண்ணை உடனடியாக மருத்துவமனியில் அனுமதிக்க வேண்டும் என்று அவரின் தந்தையிடம் தெரிவித்தோம்.. ஆனால் அவளுடைய தந்தை மறுத்துவிட்டார்.. அந்த பெண்ணின் அம்மா நாளை அவளை அழைத்து வருவார் என்று கூறினார்.
நள்ளிரவு 2 மணியளவில், அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவளுக்கு மூச்சு விட முடியவில்லை என்றும் எனக்கு ஒரு அழைப்பு வந்தது.. ஆனால் அப்போது சிகிச்சை அளிக்க. மிகவும் தாமதமாகிவிட்டது.. ஓர் இளம் பெண் இறந்துவிட்டார்..” என்று தெரிவித்தார்..
ஆழமான நரம்பு ரத்த உறைவு (DVT) என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலை.. ஆழமான நரம்புகளில், பொதுவாக கால்களில் ரத்த உறைவு உருவாகிறது. உங்களுக்கு அல்லது வேறு ஒருவருக்கு DVT இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது விளைவுகளை கணிசமாக மேம்படுத்தும்.
Read More : சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடந்தால் போதும்.. ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல.. எக்கச்சக்க நன்மைகள் இருக்கு..!!